விழுதலுக்கான ஆபத்து
என்னுடைய சிநேகிதி எலைன் உடலுக்கு ஊறு உண்டாக்கும் வகையில் கீழே விழுந்து, அதிலிருந்து தேறிக்கொண்டு வரும் வேளையில், மருத்துவமனையிலிருந்த ஒரு பணியாள் அவளது மணிக்கட்டில் பளிச் என்ற மஞ்சள் நிறமுடைய பட்டையைக் கட்டினாள். அப்பட்டையில் விழக்கூடிய ஆபத்து என்று எழுதப்பட்டிருந்தது. இந்த நபரை கவனமாக கண்காணியுங்கள். அவளால் சரியாக நடக்க இயலாது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல அவளுக்கு உதவிசெய்யுங்கள் என்பதுதான் அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தையின் அர்த்தமாகும்.
“கீழே விழுவதற்கான ஆபத்து” உள்ளது என்று 1 கொரிந்தியர் 10ம் அதிகாரம் விசுவாசிகளை எச்சரிக்கிறது.…
பகிர்ந்து கொள்வோம்
டிஸ்னி லேண்டில் புகழ்பெற்ற ஒரு காட்சியைக் காண்பதற்காக நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபொழுது, வரிசையில் நின்ற அநேக மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் நிற்பதைக் குறித்து குறைசொல்லி கொள்ளாமல் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்ததைக் கவனித்தேன். அப்படி வரிசையில் நின்றபொழுது அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகக்கூடிய காரணம் என்னவாக இருக்குமென்பதைக் குறித்து ஆழமாக சிந்தித்தேன். அங்கு நின்றவர்களில் ஒரு சிலர்தான் தனிநபர்களாக வந்திருந்தார்கள். சிநேகிதர்கள், குடும்பங்கள், குழுக்கள், தம்பதியராக வந்திருந்தவர்கள், வரிசையில் நிற்பதைப்பற்றி பேசுவதைவிட வேறுபல அனுபவங்களைக் குறித்து ஒருவரோடொருவர் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
கிறிஸ்தவ வாழ்க்கையும் தனிமையாக…
தேசத்தில் இராட்சதர்கள்
இஸ்ரவேல் மக்கள் இரண்டு ஆண்டுகள் சீனாய் மலையின் அருகில் பாளையமிறங்கி தங்கியிருந்தபின், தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்திற்குள் நுழைய இருந்தார்கள். அப்பொழுது 12 வேவுகாரர்களை அனுப்பி அந்தத் தேசத்தின் தன்மையையும், அங்கு வாழும் ஜனங்களின் தன்மையையும் பற்றி அறிந்து வரும்படி தேவன் அவர்களிடம் கூறினார். அந்த வேவுகாரர்கள் அங்கு வாழ்ந்த கானானியரின் பெலத்தையும், அவர்களுடைய பட்டணங்களின் அளவையும் பார்த்து, “அவர்களை எதிர்க்க நம்மால் கூடாது” என்று 10 பேர் கூறினார்கள், அவர்களில் 2 பேர் “அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்” என்று…
ஒப்பிட்டுப் பார்ப்பதில் முழுக்கவனம் செலுத்துவது
ஹார்வேர்டு தொழிற்பயிற்சி பள்ளியில் பேராசிரியராக இருந்த தாமஸ் T. டிலாங், அவருடைய மாணவர்கள், உடன் பணிசெய்பவர்கள் மத்தியில் கவலை அளிக்கக்கூடிய ஒரு மனப்பாங்கு நிலவுவதைக் கண்டார். அதாவது அவர்களுக்குள்ளாக ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப்பார்க்கும் மனப்பான்மை இருந்தது. “தொழில் வல்லுநர்கள், புகழ்பெற்ற வணிக அமைப்பின் மேலாண்மை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மேலும் மற்ற கைதேர்ந்த தொழில் நிபுணர்கள் ஆகியோர் அவர்களுடைய சொந்த சாதனைகளை மற்றவர்களின் சாதனைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள்... இது தனிப்பட்ட நபருக்கும், அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுக்கும் நல்லதல்ல. நீங்கள்…