2015ம் ஆண்டு கோடைகாலத்தில் ஹண்டர் என்ற 15 வயது சிறுவன் பிரேடன் என்ற 8 வயது சகோதரனை சுமந்துகொண்டு, மூளைப்பாதிப்பு ஏற்பட்ட மக்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக 58 மைல்கள் நடந்து சென்றான். பிரேடன் 60 பவுண்டு எடை உள்ளவனாக இருந்ததால், ஹண்டர் இடை இடையே அடிக்கடி நின்று ஓய்வு எடுத்தான். அப்படி ஓய்வு எடுத்த இடங்களிலிருந்த மக்கள், அவனது சதைப்பிடிப்பை நீக்குவதற்கு உதவிசெய்தார்கள். பிரேடனின் எடையைக் குறைக்க ஹண்டர் சிறப்பான வார்ப்பட்டையை அணிந்திருந்தான். சரீரப்பிரகாரமாக ஏற்படும் உடல்வலியை குறைக்க அந்த சிறப்பு வார்ப்பட்டை உதவி செய்தாலும், அவனுக்கு அதிகமாக உதவினது அவன் சென்ற வழியிலிருந்த மக்களே ஆவார்கள் என்கிறான். “வழியில் எங்களைப் பார்த்த அனைவரும் எங்களை உற்சாகப்படுத்தி எங்களுடன்கூட சேர்ந்து நடந்து வந்திருக்காவிட்டால் என்னால் அவ்வாறு செய்திருக்க இயலாது… என் கால்கள் புண்ணாகி விட்டது. ஆனால் என்னுடன் இருந்த சிநேகிதர்கள் என்னை உற்சாகப்படுத்தி என்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற உதவிசெய்தார்கள்” அவனுடைய தாயார் அந்தக்கடினமான நடைபயணத்திற்கு “மூளை பாதிக்கப்பட்டவர்க்கான மன உறுதி” என்று பெயரிட்டார்கள்.
மிக தைரியமானவரும், மன உறுதியுடையவருமானவர் என்று நாம் எண்ணும் பவுல் அப்போஸ்தலனுக்கும் “உற்சாகப்படுத்துதல்” தேவையாக இருந்தது. ரோமர் 16ல் அவ்வாறு அவரை உற்சாகப்படுத்தின நபர்களின் அட்டவணையை பவுல் அப்போஸ்தலன் கொடுத்துள்ளார். அவர்கள் அவரோடு இணைந்து ஊழியம் செய்தார்கள், அவரை உற்சாகப்படுத்தினார்கள், அவருடைய தேவைகளைச் சந்தித்தார்கள், அவருக்காக ஜெபம் பண்ணினார்கள். பெபேயாள், பிரிஸ்கில்லா, ஆக்கில்லா ஆகிய அவருடைய உடன் ஊழியக்காரர்களையும், அவருக்குத் தாய் போன்ற ரூபஸின் தாயாரையும், அவரை உபசரித்த காயுவையும், மேலும் அனேகரையும் பற்றி கூறியுள்ளார்.
நம் அனைவருக்குமே நம்மை உற்சாகப்படுத்தக் கூடிய சிநேகிதர்கள் தேவை. நாம் உற்சாகப்படுத்த தேவையானவர்களைப் பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். இயேசு நமக்கு உதவிசெய்து, நம்மை சுமப்பதுபோல, நாமும் ஒருவருக்கொருவர் உதவி செய்வோமாக.