ஜூப் சோயிடிமெக், நெதர்லேண்டில் தலைசிறந்த சைக்கிள் ஓட்டுபவராக அறியப்பட்டிருந்தார். அவ்வாறு அவர் தலைசிறந்து விளங்கக் காரணம், அவரது முயற்சியை ஒருபொழுதும் இடையிலே கைவிடாதே, அவர் டூர் டி பிரான்ஸ் என்று நடைபெற்ற உலக புகழ் பெற்ற சைக்கிள் பந்தயத்தில் 16 முறை பங்கெடுத்தார். 5 முறை இரண்டாவது இடத்திலேயே வந்தும், அவர் விடாமுயற்சியோடு தொடர்ந்து பங்கெடுத்து 1980ல் முதல் இடத்தைப் பெற்றார். இதுதான் விடாமுயற்சி.
வெற்றி பெற்றவர்களில் அநேகர், “ஒருபொழுதும் முயற்சியை கைவிடாதே” என்ற சிறப்பான ஏணியின் மூலமாகத்தான் வெற்றியை அடைந்துள்ளார்கள். ஆயினும் அநேகர் அவர்களது முயற்சியை ஆரம்பத்திலேயே கைவிட்டு விடுவதினால்தான் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலை, குடும்பம், கல்வி, வேலை, சிநேகிதர்கள், சேவை போன்ற வாழ்க்கையின் பல பகுதிகளில் ஏற்படலாம். வெற்றிக்கு விடா முயற்சியே வழிகாட்டி.
உபத்திரவங்களும், துன்பங்களும் பவுல் அப்போஸ்தலனின் விசுவாச வாழ்க்கையில் ஏற்பட்டாலும், அவற்றையெல்லாம் அவர் சகித்து, அவரது விசுவாச வாழ்க்கையைத் தொடர்ந்தார் (2 தீமோ. 3:10–11). கிறிஸ்துவை பின்பற்றுகிறர்களாக நாம் உபத்திரவப்பட வேண்டும் என்ற உண்மைத்தன்மையோடு வாழ்க்கையைக் கண்ணோக்கினார் (வச.12-13). ஆனால் தேவன் மீதும் அவரது வார்த்தைகளின் மீதும் விசுவாசத்தை வைக்கும்படி தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்தினார் (வச.14-15). அப்படிச் செய்வதினால், நம்பிக்கை இழக்கும் தருணங்களை விசுவாசத்தோடு சந்திக்கலாம். பவுல் அப்போஸ்தலன், அவரது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோ. 4:7) என்று கூறினார்.
நாமும் கூட நமக்கு குறித்திருக்கிற ஓட்டத்தில் தொடர்ந்து ஓடுவதற்கு, வேத வசனங்களினால் பெலப்படுவோம். ஏனென்றால், நமது தேவன் வாக்கு கொடுப்பவராகவும், வாக்கை நிறைவேற்றுபவராகவும் இருக்கிறார். விசுவாசத்துடன் ஓட்டத்தை ஓடி முடிப்பவர்கள் அனைவருக்கும் நிச்சயமாக அவர் பரிசளிப்பார் (வச.8).