அழுகிறவர்களுடன் அழுங்கள்
எங்கள் நாட்டிலுள்ள ஓர் பெண்கள் ஐக்கிய ஜெபக்குழு கானாவுக்காகவும், இதர ஆப்பிரிக்க நாடுகளுக்காகவும் தொடர்ந்து இடைவிடாது மாதாமாதம் கூடி ஜெபித்து வருகிறார்கள். ஏன் இவ்வாறு தேசங்களுக்காக இடைவிடாது அவர்கள் ஜெபிக்கிறார்கள் என்று கேட்டபொழுது, சுற்றிலும் பாருங்கள், செய்திகளை கவனித்துக் கேளுங்கள். போர், பேரழிவுகள், நோய்கள், வன்முறைகள் போன்றவை மனுக்குலத்திற்காக தேவன் கொண்டுள்ள அன்பையும், நம்மீது இருக்கும் ஆசீர்வாதங்களுக்கும் தடையாக மூடி மறைத்துக்கொண்டிருக்கின்றன. இதனால் நம் தேசங்கள் பாழாகின்றன. தேசங்களின் காரியங்களில் தேவன் இடைபட்டு செயல்படுகிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆகவே அவருடைய ஆசீர்வாதங்களுக்காக அவரை…
தேவனுக்காகக் காத்திருத்தல்
அடுத்து, நாங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானத்தைச் சென்றடைவதற்காக விமான நிலைய வாகனத்தில் ஒரு கூட்ட பயணிகளுடன் நான் அமர்ந்து சென்று கொண்டிருந்த பொழுது, அந்த பேருந்து ஓட்டுனருக்கு, “வாகனத்தை நிறுத்து” என்று கட்டளை கொடுக்கப்பட்டது. இது நாங்கள் எங்கள் விமானத்தை பிடிக்க இயலாதது போல் காணப்பட்டது. இது பயணம் செய்தவர்களில் ஒருவரை மிகவும் பாதித்தது. ஒருவர் வாகன ஓட்டியிடம் கோபாவேசமாகக் கத்தி, “இந்தக் கட்டளையை ஏற்றுக்கொள்ளாதே. வாகனத்தை ஓட்டிச்செல். இல்லாவிட்டால் தான் வழக்குத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்றும் ஆவேசத்துடன் அச்சுறுத்தினார்.…
வாருங்கள், சிறிது நேரம் உட்காருங்கள்
நான் சிறுவனாக இருக்கும்பொழுது, மாதந்தோறும் குடும்பமாக ஒகாயோவிலிருந்து மேற்கு வர்ஜீனியாவிலுள்ள எங்கள் தாயின் வழி தாத்தா, பாட்டியைப் பார்க்க பயணம் மேற்கொள்வோம். நாங்கள் ஒவ்வொரு முறையும் பண்ணை வீட்டின் வாசலை அடைந்தவுடன் எங்கள் பாட்டி லெஸ்டர் “உள்ளே வாருங்கள், சிறிது நேரம் உட்காருங்கள்” என்று எங்களை வரவேற்பார்கள். நாங்கள் சிறிது நேரம் வசதியாக உட்கார்ந்து அனைவரையும் ஈர்க்கத்தக்க விதத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் அவ்வாறு கூறுவார்கள்.
வாழ்க்கை மிக மிக வேகமாக நிற்கக்கூட நேரமின்றி சென்று கொண்டிருக்கலாம். தொழிலையே முக்கியமாகக்…
கடுங்குளிரில் வெட்ட வெளியில்
பதற்றமான நிலையில், ஓர் பெண் நான் பணிபுரியும் வீட்டு உதவி மையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள். வீட்டை அனல்மூட்டும் கருவி பழுதடைந்ததால், வாடகைக்குக் குடியிருந்த அவள் வீடு மரக்கலன்கள் (மேஜை, நாற்காலி போன்றவை) கூட பனிக்கட்டி போல் உறைந்து விட்டது. என்ன செய்வது என்று அறியாத நிலையில், தன் குழந்தைகளை அந்தக் குளிரினின்று எவ்வாறு காப்பாற்றுவது என்று கேட்டாள், அலுவலகத்தில் அச்சடிக்கப்பட்டு வைத்திருந்த பதிலை எடுத்து “உடனே ஓர் உணவு விடுதிக்குச் சென்று தங்குங்கள். அதற்கு ஆகும் கட்டண ரசீதை வீட்டுச் சொந்தக்காரருக்கு…