நமது பிரதானமான பணி
உலகிலுள்ள சமயங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டு உலகளாவிய ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேய கல்வியாளர் ஒருவர் அழைப்பு விடுத்தபொழுது அதை உலகமே புகழ்ந்து வரவேற்றது. “நம்முடைய காலத்தில் நாம் செய்ய வேண்டிய பிரதானமான பணி என்னவென்றால், அனைத்து சமயத்தைச் சார்ந்த மக்களும் ஒன்றிணைந்து சமாதானத்துடனும், ஒருமைப்பாட்டுடனும் இணைந்து வாழவேண்டும்” என்ற முக்கியமான விதிமுறையை பெரும்பான்மையான மதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதை அந்த கல்வியாளர் சுட்டிக்காட்டினார்.
இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் ஒரு முக்கியமான விதிமுறையைக் கூறினார். “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும்…
முக்கியமான ஞாபகமூட்டிகள்
மனித வர்க்க ஆராய்ச்சியாளர் அந்தோனி கிரேஸ்ச், குளிர் சாதனப்பெட்டியின் வெளிப்பகுதி, மக்கள் எதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது என்று கூறுகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள குடும்பங்களை ஆராய்ச்சி செய்தபொழுது, கிரேஸ்சும், அவர் உடன் பணியாட்களும் அறிந்து கொண்டது என்னவெனில் - பள்ளிக்கூட நிகழ்ச்சி அட்டவணை, குடும்ப புகைப்படங்கள், சிறுவர்கள் வரைந்துள்ள படங்கள், காந்தங்கள் போன்று குறைந்த பட்சமாக 52 பொருட்கள் குளிர்சாதனப் பெட்டியின் மேல் ஓட்டப்பட்டிருந்தன என்று கணக்கிட்டனர். எனவே கிரேஸ்ச் குளிர்சாதனப்பெட்டியை “ஓர் குடும்பத்தின் ஞாபகார்த்த களஞ்சியம்” என்று கூறுகிறார்.…
இருதயத்தை ஸ்திரப்படுத்துதல்
பல ஆண்டுகளாக நான் உடற்பயிற்சி செய்து வந்த உடற்பயிற்சி மையம் கடந்த மாதம் மூடப்பட்டது. எனவே நான் மற்றோர் புதிய உடற்பயிற்சி மையத்தில் சேர நேர்ந்தது. முன்பு உடற்பயிற்சி செய்த மையத்தில் இதமாகவும், நட்புடன் பழகும் வசதியும், பொதுவுடமைக் கொள்கையை ஆதரிப்பவர்களாகவே அனைவரும் செயல்பட்டனர். வியர்வை என்பது எங்களுக்கு ஏற்பட்டதில்லை. இந்த புதிய உடற்பயிற்சி மையம் உடற்பயிற்சிக்கான அனைத்து வசதிகளையும் கொண்டதாக தங்கள் உடற்கட்டமைப்பை சிறந்த முறையில் வைத்துக்கொள்வதற்காக மிகவும் அக்கறையுடன் தீவிரமாக செயல்படும் ஆண், பெண் உடற்பயிற்சி செய்பவர்களால் மாத்திரம் நிறைந்து காணப்பட்டது.…
உடன் வருதல்
மி’அஸ்யா மிகவும் நடுக்கத்துடன் மேடையை நோக்கி நடந்துசென்று, தன் முப்பது சக மாணவர்கள், அவர்கள் பெற்றோர் முன்னிலையில் ஐந்தாவது வகுப்பு பட்டமளிப்பு விழாவில் பேசப்போவதை அனைவரும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். பள்ளி முதல்வர் ஒலிப்பெருக்கியை மி’அஸ்யாவின் உயரத்திற்கு ஏற்றாற்போல் சீர்செய்து வைத்தபொழுது, ஒலிப்பெருக்கிக்கும், பார்வையாளர்களுக்கும் தன் முதுகைக்காட்டி மறுபுறம் திருப்பிக்கொண்டார். “தேன் போன்று இனிமையானவளே பயப்படாதே, உன்னால் பேசமுடியும், பேசு” என்று கூட்டத்தில் இருந்த அனைவரும் அவளை உற்சாகப்படுத்தினார்கள். ஆனால் அவளோ சிறிதும் அசையவில்லை. அப்பொழுது அவள் சகமாணவி மேலே சென்று அவளருகே நின்றுகொண்டாள். முதல்வர் ஒருபுறமும்,…