அது வெறும் சாவிகோர்க்கும் சங்கிலிதான். அது ஐந்து சிறு மரத்துண்டுகளை ஒரு
ஷூ கட்டும் கயிற்றினால் இணைத்த ஓர் கொத்து. என் மகள் 7 வயதாக இருக்கும்பொழுது பல ஆண்டுகளுக்கு முன் அதை எனக்குக் கொடுத்தாள். இன்று அந்தக்கயிறு பழசாகி நைந்து போய், மரத்துண்டுகள் உடைந்துபோய் பழமையாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவை “அப்பா நான் உங்களை நேசிக்கிறேன்” என்ற செய்தியைக் கொடுத்து என்னை வசீகரித்துள்ளதால் அந்த செய்தி பழமையாவதே இல்லை.
ஓர் பரிசு எப்பேர்ப்பட்ட பரிசு என்பதில் அல்ல, அது யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதில் தான் பரிசின் விலையேறப்பெற்ற தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. களை என்று கருதப்படும் “டாண்டிலியான் பூங்கொத்து” ஒன்றை அழகிய பிஞ்சுக் கரங்களால் பெற்றுக்கொண்ட பெற்றோரிடம் கேட்டுப்பாருங்கள். சிறந்த பரிசு என்பது பணத்தினால் அல்ல, அன்பினால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
சகரியா இதை விளங்கிக் கொண்டார். அவருக்கும் அவர் மனைவியாகிய எலிசபெத்திற்கும், பிள்ளை பெறத்தக்க வயதைக் கடந்தவர்களாய்க் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு யோவானைக் குமாரனாகத் தந்ததற்காக தேவனைப் புகழ்ந்து தீர்க்கதரிசனப் பாடலை பாடியதிலிருந்து நாம் அதை அறிய முடிகிறது (லூக். 1:67–79). அனைத்து மனுக்குலத்திற்கும் தேவன் மாபெரும் ஈவாக வரப்போகிற மேசியாவைக் குறித்து அறிவிக்க யோவான் ஒர் தீர்க்கதரிசியாகப் போகிறான் என்று சகரியா பெரும் மகிழ்ச்சியடைந்தார். “அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மை சந்தித்திருக்கிறது” (லூக். 1:79) என்று பாடினார். இந்த வார்த்தைகள் அளவற்ற அன்பினால் அந்த ஈவு கொடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில் “அந்தகாரத்திலும், மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்” என்று குறிப்பிடுகிறார் (வச.1:78).
நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய இனிமையான ஈவு தேவனுடைய தயையுள்ள கிருபை. இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளும் பாவமன்னிப்பு. அவர் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பினால் இந்த ஈவைக் கொடுக்கிறார்.