தென் அமெரிக்காவில் கோடைகால நடுமதிய வெப்பத்தில், பயணித்துக் கொண்டிருந்த என் மனைவியும், நானும் ஐஸ்கிரீம் சாப்பிட ஓர் இடத்தில் நின்றோம். பணம் செலுத்தும் இடத்திற்கு பின்னால் உள்ள சுவற்றில் “முற்றிலும் பனி ஊர்தி கிடையாது” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தோம். இது நாங்கள் எதிர்பாராத ஒன்றாக இருந்ததால் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
சில சமயங்களில் எதிர்பாராத சொற்கள் மிகவும் வலிமை மிக்கவைகளாகக் காணப்படும். “தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் காப்பான்” (மத். 10:39) என்று இயேசு கூறிய வசனத்தை இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். ராஜ்யத்தில் அரசன், வேலைக்காரனாக இருக்குமிடத்தில் (மாற். 10:45), உங்கள் ஜீவனை இழப்பது என்பது அதை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வழியே ஆகும். சுய முன்னேற்றத்தையும், தற்காப்பையுமே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள இவ்வுலகிற்கு இது ஓர் அதிர்ச்சி தரும் செய்தியே.
நடைமுறையில் பார்க்கும்பொழுது நம்முடைய “ஜீவனை எவ்வாறு நாம் இழக்க முடியும்”? சுருக்கமாக கூறினால் “நம்மை நாமே பலியாக ஒப்புக்கொடுப்பதன் மூலம்” என்று கூறலாம். இவ்வாறு நம்மை நாமே தியாகம் செய்யும் பொழுது இயேசு வாழ்ந்த வாழ்க்கையை நாம் செயல்படுத்துவோம். நமது தேவைகளையும், விருப்பங்களையுமே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்காமல் பிறரின் தேவைகளையும், அவர்கள் நலன்களையும் அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்போம்.
இயேசு தியாகத்தைப் போதித்தது மாத்திரம் அல்ல, தம்மைத் தாமே நமக்காக பலியாகக் கொடுத்தார். தாம் போதித்தபடியே இறுதியாக தாம் சிலுவையில் மரித்ததன் மூலம் இயேசு இராஜாவின் அர்ப்பணிப்பின் உள்ளம்; “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவனிடத்திலுமில்லை” என்று அவர் கூறிய வார்த்தையின்படி தியாகத்தை வெளிப்படுத்தினார் (யோவா 15:13).