நான் பணிபுரிந்த நிருவனத்தில் பத்தாண்டுகளுக்கு முன் என்னைப் பணியிலிருந்து நீக்கி “நாங்கள் உங்களைப் பணியிலிருந்து நீக்குகிறோம்” என்று கூறியபொழுது என் தலை சுற்றியது. பதிப்பாசிரியராக பணிபுரிந்த எனக்கு அவ்வேளையில் மனம் சுக்குநூறாகஉடைந்தது. நான் சுயமாகச் செய்து கொண்டிருந்த பணியும் நிறைவடையப் போகிறது என்று சமீபத்தில் கேள்விப்பட்டேன். ஆனால், இம்முறை அச்செய்தி என்னை நிலைகுலையச் செய்யவில்லை. ஏனென்றால் என் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற தேவன் உண்மையுள்ளவர் என்பதைப் பல ஆண்டுகளாக அனுபவித்திருந்தேன். ஆகையால் நான் முன்போல் அதிகமாய் அசைக்கப்படவில்லை.
வேதனையும், ஏமாற்றங்களும் நிறைந்த விழுந்துபோன இவ்வுலகத்தில் நாம் வாழ்கின்ற போதிலும், ஏசாயா 61:1–3 வரையுள்ள வசனங்களில் ஏசாயா தீர்க்கன் இயேசுகிறிஸ்துவின் வருகையைப்பற்றி கூறியுள்ளது போல, தேவன் நமது விரக்தியான சூழ்நிலையை களிப்பாக மாற்ற வல்லவராக இருக்கிறார். நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் தேவன் நமக்கு நம்பிக்கையைத் தருகிறார். பிறரை மன்னிக்க முடியாத சூழ்நிலையிலிருக்கும் பொழுது அவர்களை மன்னிப்பதற்கு உதவி செய்கிறார். அவருக்காக நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல் அவருக்குள் நாம் அங்கீகரிக்கப்படுகிறோம் என்பதைக் கற்றுத் தருகிறார். அடுத்து என்ன நிகழும் என்று நம்மால் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள எதிர்காலத்தைச் சந்திக்கத் தேவையான தைரியத்தைக் கொடுக்கிறார். இரட்டுடுத்தி “சாம்பலில்” உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றி “துதியின்” ஆடையை நமக்கு உடுத்துகிறார்.
நாம் இழப்புகளைச் சந்திக்கும் பொழுது, கஷ்டங்களை அனுபவிப்பதை விட்டுவிலகி ஓடக்கூடாது. நாம் மனக்கசப்படையவோ அல்லது இருதயத்தைக் கடினப்படுத்தவோ கூடாது. தேவன் உண்மையுள்ளவர் என்று பல ஆண்டுகளாக அறிந்த நாம், அவர் நமது துன்பங்களைக் களிப்பாக மறுபடியும் மாற்ற வல்லவர் என்றும் அப்படிச்செய்ய விருப்பமுடையவராயிருக்கிறார் என்பதையும் நாம் அறிவோம். அவர் இம்மையில் நமக்குத் தேவையான கிருபையையும், பரலோகத்தில் பூரண மகிழ்ச்சியையும் தர வல்லவர்.