மனித வர்க்க ஆராய்ச்சியாளர் அந்தோனி கிரேஸ்ச், குளிர் சாதனப்பெட்டியின் வெளிப்பகுதி, மக்கள் எதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது என்று கூறுகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள குடும்பங்களை ஆராய்ச்சி செய்தபொழுது, கிரேஸ்சும், அவர் உடன் பணியாட்களும் அறிந்து கொண்டது என்னவெனில் – பள்ளிக்கூட நிகழ்ச்சி அட்டவணை, குடும்ப புகைப்படங்கள், சிறுவர்கள் வரைந்துள்ள படங்கள், காந்தங்கள் போன்று குறைந்த பட்சமாக 52 பொருட்கள் குளிர்சாதனப் பெட்டியின் மேல் ஓட்டப்பட்டிருந்தன என்று கணக்கிட்டனர். எனவே கிரேஸ்ச் குளிர்சாதனப்பெட்டியை “ஓர் குடும்பத்தின் ஞாபகார்த்த களஞ்சியம்” என்று கூறுகிறார்.
தேவனும், தம்முடைய உண்மைத்தன்மையை நமக்கு வெளிப்படுத்தி, அவருடைய வசனத்திற்குக் கீழ்ப்படிவதை நினைப்பூட்ட எளிதாய்ப் பார்க்கக் கூடிய புகைப்படம், நினைவுப் பரிசு, வசன அட்டை போன்றவற்றைப் பயன்படுத்துகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்னதாக தேவன் அனைத்துக் கட்டளைகளையும் காத்து நடக்க வேண்டும் என்று கட்டளையிட்டபொழுது “நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும்… அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக” (உபா. 6:7,9).
“நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” (வச.12) என்ற வசனம் தேவனுடைய வார்த்தையை யாவரும் அறிந்துகொள்ளும் வண்ணமாக அனைவரும் பார்க்கக்கூடிய முக்கிய இடத்தை, வீடுகளிலும், வாழ்க்கையிலும் அதற்குக் கொடுக்க வேண்டும் என்கிறது.
நாம் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நம்மை ஞாபகப்படுத்தி, அவ்வாறு கீழ்ப்படியும்பொழுது வருங்காலத்தில் அவருடைய உண்மையுள்ள பராமரிப்பைச் சார்ந்து வாழலாம் என்று நம்மை இன்று தேவன் ஊக்குவிக்கிறார்.
