Archives: ஜூன் 2016

மனித இனம் (ஓட்டம்)

அலார்ம் கடிகாரம் ஒலித்து நின்றது. இது மிகவும் சீக்கிரமாகத் தோன்றியது. முழுமையான ஓர் நாள் இன்னும் உங்களுக்கு முன் இருக்கிறது. வேலை செய்ய வேண்டும், நிர்ணயம் செய்யப்பட்ட காரியங்களை அதன் பிரகாரம் செய்து முடிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மக்களை கவனிக்க வேண்டும். இதே போன்று அநேக காரியங்கள். ஆம் நீங்கள் தனிமையில் இல்லை. நம்மில் அநேகர் எதைச்செய்ய வேண்டும் என்று தெரியாது ஓர் காரியத்திலிருந்து மற்றோர் காரியத்தைச் செய்ய அங்கும் இங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருப்போம். அதனால்தான் நாம் ஓட்டப்பந்தயம் ஓடும் மனிதர் என்று…

தூரமான இடம்

டிஸ்டான் டா குன்ஹா என்ற தீவு தனிமைக்கு சிறந்து விளங்கும் ஓர் எடுத்துக்காட்டு உலகிலேயே மக்கள் வசிக்கும் மிக தூரமான தீவாகும். 288 மக்கள் அதைத் தங்கள் குடியிருப்பாகக் கொண்டிருப்பதற்கு நன்றி. இத்தீவு தென் அட்லாண்டின் சமுத்திரத்தில், தென் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு 1750 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. யாரையேனும் சந்திக்க வேண்டுமென்றால், விமானப்போக்குவரத்து வசதியில்லாததால் ஏழு நாட்கள் படகில் பிரயாணம் செய்ய வேண்டும்.

இயேசுவும், அவருடைய சீஷர்களும் ஆயிரத்திற்கும் அதிகமாக, பசியில் வாடிய மக்களை அற்புதமாய் போஷித்தது அப்படிப்பட்ட ஓர் தூரமான இடத்தில்தான். இயேசு…

அன்பு செலுத்தக் கற்றுக் கொள்ளுதல்

அன்பு, “உலகம் சுழல்வதை விட” அதிகம் செய்கிறது என்று ஓர் பழைய பாடல் சொல்கிறது. அன்பு நம்மை அதிகமாய் குறைபட்டுக் கொள்ளச் செய்யும். “பிறர் நம்மை பாராட்டாமல் இருக்கும் பொழுது நாம் ஏன் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும்? அன்பு செலுத்திவிட்டு பின் நான் ஏன் என்னையே புண்படுத்திக் கொள்ள வேண்டும்?” ஆனால் பவுல் அப்போஸ்தன் மிகவும் தெளிவான, எளிதான அன்பை விடாது தொடர்ந்து செயல்படுத்துவதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார்.” இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது, இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி.…

ஹூ-ஆ!

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்தில் உள்ள படைகள் தங்கள் சம்மதத்தை தெரிவிக்க அடித்தொண்டையிலிருந்து உரத்த சத்தமாய் “ஹூ” என்று பதிலுரைப்பார்கள். அதன் உண்மையான அர்த்தம் வரலாற்றில் மறைந்து விட்டது. ஆனால் இவ்வார்த்தை (HUA) என்ற ஓர் சொற்றொடரின் முதல் எழுத்திலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை என்று சிலர் கூறுகிறார்கள். (HUA; H-Heard கேட்டேன்
U-understood  விளங்கிக் கொண்டேன் and A Acknowledged ஏற்றுக் கொண்டேன்) கேட்டேன், விளங்கிக்கொண்டேன், ஏற்றுக்கொள்கிறேன் என்பது அதன் அர்த்தம். நான் முதல் முதலாக அடிப்படை பயிற்சியின் பொழுது இந்த வார்த்தையைக் கேட்டிருக்கிறேன்.…

அப்பா, பிதாவே

தந்தையர் தினத்தன்று அனுப்பப்படும் வாழ்த்து அட்டையில் இந்த விநோதமான ஒரு   படம் இருந்தது. ஓர் தந்தை ஓர் கையால் புல்வெட்டும் இயந்திரத்தால் வெட்டிக்கொண்டு சென்றபொழுது, மறு கையால் சிறுபிள்ளைகளை வைத்துச் செல்லும் தள்ளுவண்டியை பின்னால் இழுத்துக் கொண்டு சென்றார். தள்ளுவண்டியில் அவருடைய மூன்று வயது மகள் அமர்ந்து கொண்டு தங்களுடைய தோட்டத்தை இயந்திர சத்தத்திற்கிடையில் மகிழ்ச்சியுடன் வலம் வந்தாள். இதுபாதுகாப்பற்ற ஓர் செயலாக இருந்தாலும், ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய முடியாது என்று யார் சொல்லக்கூடும்?

உங்களுக்கு ஓர் நல்ல தகப்பன் இருந்தால்,…