கிறிஸ் பேக்கர் பச்சை குத்தும் கலைஞர். அவர் பச்சை குத்தப்பட்டிருந்த வேதனையின் சின்னங்களையும், அடிமைத்தன சின்னங்களையும் கலைநயமிக்க சித்திரங்களாக மாற்ற வல்லவர். அவனிடம் வரும் வாடிக்கையாளர்களில் அநேகர் தீயவழியில் சென்ற கூட்டத்தினர், மனிதரைக் கடத்திச் செல்வதில் அடிமைப்பட்டவர்கள், இவர்களுக்கென அவர்களை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெயர்களையும், சின்னங்களையும், குறியீடுகளையும் அவர்கள் கொண்டவர்கள். கிறிஸ் இப்படிப்பட்ட சின்னங்களை தன் கலைத் திறனால் மிகவும் அழகான உருவங்களாக்கி அவர்கள் தோல்மீது பச்சை குத்தினான்.
கிறிஸ்து பிறர் தோலின்மீது ஏற்படுத்திய மாற்றங்களைப்போல இயேசு நம் ஆத்துமாக்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். நாம் இருக்கிற வண்ணமாகவே நம்மை எடுத்து, நம்மை உருமாற்றம் செய்கிறார். “இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17). கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்குமுன் நம் சுய விருப்பங்களின்படியே, நம் மனம்போனபடி நடந்து வந்தோம். நமது வாழ்க்கை அதையே பிரதிபலித்தது. நாம் பாவ அறிக்கை செய்து, கிறிஸ்துவுடன் வழிநடக்கத் துவங்கியபின் ஒரு காலத்தில் நம்மை ஆட்கொண்டிருந்த பாவ இச்சைகள், படுகுழிகள் போன்றவற்றால் “இப்படிப்பட்டவர்களாய் இருந்தோம்” (1 கொரி. 6:11). ஆனால் நாம் மறுரூபமாக்கப்பட்ட பொழுது எல்லாம் மறைந்து போயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கினார்” 2 கொரி. 5:18.
“புதிய மனிதனாக” இருப்பது இன்றும் ஓர் இலகுவான காரியமல்ல, பழைய காரியங்களிலிருந்து விடுபட நீண்ட நாட்கள் செல்லும். அக்காலங்களில் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்து, உள்ளான மனிதனில் பலத்தையும், கிறிஸ்துவின் அன்பை அறிந்து கொள்ளவும் உதவி செய்வார். கிறிஸ்துவில் அழகாக, புதிதாக்கப்பட்டவர்களாக கடந்த காலத்தைப் பின்னாகத் தள்ளிவிட்டு நாம் விடுதலையுள்ளவர்களாக வாழ்வோம்.