டிஸ்டான் டா குன்ஹா என்ற தீவு தனிமைக்கு சிறந்து விளங்கும் ஓர் எடுத்துக்காட்டு உலகிலேயே மக்கள் வசிக்கும் மிக தூரமான தீவாகும். 288 மக்கள் அதைத் தங்கள் குடியிருப்பாகக் கொண்டிருப்பதற்கு நன்றி. இத்தீவு தென் அட்லாண்டின் சமுத்திரத்தில், தென் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு 1750 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. யாரையேனும் சந்திக்க வேண்டுமென்றால், விமானப்போக்குவரத்து வசதியில்லாததால் ஏழு நாட்கள் படகில் பிரயாணம் செய்ய வேண்டும்.
இயேசுவும், அவருடைய சீஷர்களும் ஆயிரத்திற்கும் அதிகமாக, பசியில் வாடிய மக்களை அற்புதமாய் போஷித்தது அப்படிப்பட்ட ஓர் தூரமான இடத்தில்தான். இயேசு இந்த அற்புதத்தைச் செய்யுமுன் தம் சீஷரை நோக்கி “இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்று நாட்களாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் சோர்ந்து போவார்களே” என்று அந்த அற்புதத்தை நடப்பிக்குமுன் தம் சீடரிடம் கூறினார் (மாற். 8:2, 3). ஆகாரத்தை உடனே வாங்க முடியாத ஓர் கிராமப்புறமான இடத்தில் அவர்கள் இருந்தார்கள். முற்றிலும் அவர்கள் இயேசுவையே சார்ந்திருந்தார்கள். வேறு வழியே இல்லை.
எங்கும் செல்ல முடியாத, தேவனையே சார்ந்திருக்கக் கூடிய ஓர் இக்கட்டான சூழ்நிலையை தேவன் சிலசமங்களில் நமக்கு அனுமதிக்கிறார். நமது சூழ்நிலைகளுக்கும், நமது தேவைகளை அவர் சந்திப்பதற்கும் எந்தவித ஓர் சந்தேகமும் இருக்கத் தேவை இல்லை. ஒன்றுமில்லாமையிலிருந்து அண்ட சராசரத்தையும் சிருஷ்டித்த தேவன் நமது தேவைகள் அனைத்தையும் நிச்சயமாக சந்திக்க முடியும். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படியே உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி. 4:19).