அன்பு, “உலகம் சுழல்வதை விட” அதிகம் செய்கிறது என்று ஓர் பழைய பாடல் சொல்கிறது. அன்பு நம்மை அதிகமாய் குறைபட்டுக் கொள்ளச் செய்யும். “பிறர் நம்மை பாராட்டாமல் இருக்கும் பொழுது நாம் ஏன் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும்? அன்பு செலுத்திவிட்டு பின் நான் ஏன் என்னையே புண்படுத்திக் கொள்ள வேண்டும்?” ஆனால் பவுல் அப்போஸ்தன் மிகவும் தெளிவான, எளிதான அன்பை விடாது தொடர்ந்து செயல்படுத்துவதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார்.” இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது, இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி. 13:13). “அன்பை நாடுங்கள்” (1 கொரி. 14:1).
“அன்பு என்பது ஓர் கிரியையின் வெளிப்பாடு. தேவனையே மையமாகக் கொண்ட ஓர் செயல் தான் அன்பு” என்று வேதாகம விமரிசகர் C.K. பாரெட் கூறுகிறார். மேலும் அவர் “தேவனையோ அல்லது தங்கள் சக மனிதரையோ நேசிக்கும் பொழுது தேவன் அன்பு செலுத்துவதை விட மக்கள் (குறைவாகவே) அன்பு செலுத்துகிறார்கள் என்று கூறுகிறார். தேவனைப் போல் அன்பு செலுத்துவதையே தேவன் விரும்புகிறார்.
அன்பின் வழிகளை நீங்கள் கடைப்பிடிக்கத் துவங்கும் பொழுது 1 கொரிந்தியர் 13:4–7ல் கொடுக்கப்பட்டுள்ள பண்புகளை அடிப்படையாகக் கொண்டு எப்படி நீங்கள் வாழ வேண்டும் என்று சிந்தியுங்கள். உதாரணமாகத் தேவன் என்னிடம் பொறுமையாக இருப்பது போல் நான் எவ்வாறு அப்படிப்பட்ட பொறுமையை என் பிள்ளையிடம் காட்ட முடியும்? என்னுடைய பெற்றோருக்கு அன்பையும், மரியாதையையும் எவ்வாறு காட்ட இயலும்? நான் வேலையில் ஈடுபட்டிருக்கும்பொழுது பிறர் நலன் கருதிச் செயல்பட வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? என்னுடைய சிநேகிதிக்கு நன்மையான ஓர் காரியம் நடைபெற்றிருந்தால் நான் சந்தோஷப்டுகிறேனா அல்லது பொறாமைப்படுகிறேனா?
“அன்பின் வழியை நாம் பின்பற்றும் பொழுது”, அன்பின் மூலகாரணராகிய தேவனிடம் நாம் திரும்பி, அன்பின் மாபெரும் இலக்கணமாகத் திகழும் இயேசுவிடமும் நம்மை ஒன்றிணைத்துக் கொள்வோம். அப்பொழுது தான் உண்மையான அன்பு எது என்றும், தேவன் நம்மில் அன்பு கூர்ந்தது போல நாமும் பிறரை நேசிப்பதற்கான பெலனைப் பெற்று, அவற்றைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற முடியும்.