ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18ம் நாள் வாட்டாலூ யுத்தம் நினைவுகூரப்படும் நாள். அன்றைய வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம். 1815ம் ஆண்டு அன்றைய நாளில் நெப்போலியனின் பிரெஞ்சுப்படை, வெல்லிங்டன் பிரபு நடத்திச் சென்ற பன்னாட்டுப் படையினரால் தோற்கடிக்கப்பட்டது. “உங்களை விட பலமுள்ளவர்களால் நீங்கள் தோற்கடிக்கப்படும் பொழுதோ அல்லது உங்களால் எதிர்கொள்ள முடியாத மிகக் கஷ்டமான பிரச்சனையை நீங்கள் சந்திக்கும்பொழுதோ” அவற்றைக் குறிக்க “உங்கள் வாட்டர்லூவை சந்திக்க” என்ற சொற்றொடர் அப்பொழுதிலிருந்து பழக்கத்திற்கு வந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படும்பொழுது, இறுதியாக தோல்வி என்பது தவிர்க்க முடியாதது. ஓர் காலகட்டத்தில் “நாம் நம் வாட்டால்லூவை சந்திப்போம்” என்ற உணர்வு ஏற்படும். ஆனால் யோவான் இப்படிப்பட்ட நம்பிக்கையற்ற நோக்கங்கள் தவறானவை என்று இயேசுவைப் பின்பற்றுவோருக்கு “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும், நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” என்று எழுதுகிறார் (1 யோவா. 5:4).
சீக்கிரமாக அழிந்து போகும் இவ்வுலகப் பொருட்களின்மீது ஆசை வைக்காதேயுங்கள் என்று இந்த ஆவிக்குரிய வெற்றிக்கான தத்துவத்தை முதலாம் நிருபம் முழுவதிலும் யோவான் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறார் (2:15–17). இதற்குக் கைமாறாக நாம் அவர்மீது அன்புகூர்ந்து, அவரைப் பிரியப்படுத்த வேண்டும். “நித்திய ஜீவனை அளிப்பேன்” என்று அவர் நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார் (2:25).
நம் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், சில போராட்டங்களில் நாம் தோற்றுப்போவது போல் உணரலாம். ஆனால் நாம் அவருடைய வல்லமையை நம்பிச் சார்ந்திருப்பதால் இறுதி வெற்றி நமதே.