கி.மு. 444 ஆண்டு ஏழாம் மாதத்தின் முதல் நாளில் சூரியன் உதித்தபோது, எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணத்தை வாசிக்க ஆரம்பித்தான். (வேதத்தில் நாம் காணும் முதல் ஐந்து புத்தகங்கள்) எருசலேமில் மக்கள் முன்னால் எஸ்றா ஓர் மேடையில் நின்றுகொண்டு, அடுத்த ஆறுமணி நேரங்களுக்கு தொடர்ந்து வாசித்தான்.

தண்ணீர் வாசல் எனப்படும் நகரத்தின் வாசல் முகப்பில், ஆண்களும், பெண்களும், சிறுவரும் எக்காளப் பண்டிகையைக் கொண்டாட கூடிவந்திருந்தார்கள். அவர்களுக்கு தேவன் நியமித்த பண்டிகைகளில் இதுவும் ஒன்று. அவர்கள் கவனித்துக் கேட்டதன் விளைவாக நான்குவிதமான பின் விளைவுகள் அவர்களில் காணப்பட்டன.

நியாயப்பிரமாண புத்தகத்தைத் திறந்த பொழுது ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள் (8:5). ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து,… “ஆமென், ஆமென்” என்று சொல்லி, குனிந்து முகங்குப்புற விழுந்து கர்த்தரைப் பணிந்து கொண்டார்கள்” (வச.6). “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து அர்த்தஞ்சொல்லி, வாசித்ததைக் கவனமாய்க் கேட்டார்கள் (வச.8). கர்த்தர் “இஸ்ரவேல் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணப் புத்தகம்” (வச.1) எருசலேமில் புதிதாகக் கட்டப்பட்ட அவர்களுக்குள் உரத்த சத்தமாய் வாசிக்கப்பட்ட அந்த நாள் எவ்வளவு ஆச்சரியமான நாள்!

எஸ்றாவின் மராத்தான் வாசிப்பு நேரம், தேவனுடைய வார்த்தை, அவரைத் துதிக்க, ஆராதிக்க கற்றுக்கொள்ள இன்றும் நமது ஆதாரமாக விளங்குகிறது. நாம் வேதத்தைத் திறந்து, கிறிஸ்துவைப்பற்றி அதிகமாய் கற்றுக்கொள்ளும் பொழுது தேவனைத் துதிப்போம், அவரை ஆராதிப்போம், இன்று என்ன கூறுகிறார் என்று தேடி ஆராய்வோம்.