என்னுடைய வட லண்டன் சுற்றுப்புறங்களில் நான் நடந்து செல்லும்பொழுது, போலிஷ், ஜப்பானிஷ், ஹிந்தி, குரோயேஷியன், இத்தாலியன் என்பது போன்ற பல மொழிகளில் மக்கள் தனித்தனியே உரையாடுவதைக் கேட்க முடியும். இப்படிப்பட்ட வேற்றுமை எனக்கு பரலோகத்தை ருசிப்பது போன்ற ஓர் உணர்வை உண்டாக்கும். ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியாது. ஓர் ரஷ்ய உணவுவிடுதி, அல்லது போலிஷ் சந்தைக்குள் நான் நுழையும்பொழுது வேறு வேறு விதமான பேச்சு வழக்குகளையும், சத்தங்களையும் கேட்க முடியும். அப்பொழுது பெந்தெகொஸ்தே நாளன்று சீடர்கள் என்ன பேசினார்கள் என்பதை பல தேசத்திலுமிருந்து வந்த மக்கள் விளங்கிக் கொண்டார்கள் என்பதை என் மனதில் கொண்டுவந்து அது எவ்வளவு ஆச்சரியப்படத்தக்கதொன்று என்று எண்ணுவேன்.
பெந்தெகொஸ்தே தினத்தன்று யாத்ரீகர்கள், அறுப்பின் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக எருசலேமில் ஒன்றாகக் கூடினார்கள். விசுவாசிகளின்மீது பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கினதால் அவர்கள் பேசியபொழுது, அதைக்கேட்டவர்கள் (உலகின் பல பாகங்களிலிருந்து வந்தவர்கள்) தங்கள், தங்கள் சொந்த பாஷைகளில் பேசக் கேட்டார்கள் (அப். 2:5–6). வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்கள் தங்கள் தங்கள் பாஷைகளில் அவர்கள் தேவனைத் துதித்ததை அவர்கள் விளங்கிக் கொண்டார்கள் என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம்! இதனால் அநேகர் இயேசுவைப்பற்றி இன்னும் அறிய தூண்டப்பட்டார்கள்.
நாம் பல மொழிகளைப் பேசவோ அல்லது விளங்கிக் கொள்ளவோ முடியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் வேறுவிதங்களில் நம்மை அவர்களோடு இணைத்துக்கொள்ள நமக்குப் பயிற்சி அளிக்கிறார். ஆச்சரியப்படத்தக்க வகையில், அவர் பணியைச்செய்ய நாம் அவர் கரங்களாகவும், கால்களாகவும், வாயாகவும் இருக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் அறியப்படாதவர்களுக்கு இன்று சுவிசேஷத்தை எடுத்துச் சொல்கிறோம்.