ரெபேக்கா ஓர் மாநாட்டின் மேடையில் ஒலிபெருக்கி முன் நின்று பேசியபொழுது, அவள் பேசியது அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. அவள் பேசிய வார்த்தைகளையே அவள் திரும்பக் கேட்டபொழுது சற்று சிரமமாக இருந்தது. இந்தத் தவறான ஒலி அமைப்பு முறையை அவள் சீர்செய்து, அந்த எதிரொலியை கவனிக்காமல் விட்டுவிட முயற்சித்தாள்.

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், திரும்பவும் நாமே கேட்க நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்! “நான் உன்னை நேசிக்கிறேன்,” அல்லது “நான் செய்தது தவறு” அல்லது “உமக்கு நன்றி, தேவனே” அல்லது “நான் உனக்காக ஜெபம் செய்கிறேன்” போன்ற வார்த்தைகளைக் கேட்டால் பரவாயில்லை. ஆனால் நாம் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அழகானவையாகவும், இதமானதாகவும், அன்புடனும் இருக்காது. ஆனால் கோபாவேசத்தோடு நாம் கத்துவது, பேய்த்தனமான விமரிசனங்கள் போன்றவற்றை ஒருமுறை கூட யாரும் கேட்க விரும்பாத நிலையில், அந்த வார்த்தைகளை மறுபடியும் நாமே திரும்பக் கேட்பது எப்படியிருக்கும்?

சங்கீதக்காரன் தாவீதைப்போல நமது வார்ததைகளுக்கு தேவன் காவல் வைக்க நாமும் வாஞ்சிக்கிறோம். “கர்த்தாவே, என் வாய்க்கு காவல் வையும், என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” என்று ஜெபிக்கிறான் (சங். 141:3). நல்லவேளை! தேவன் அதைச்செய்ய விரும்புகிறார். நாம் பேசுவதைக் கட்டுப்பாட்டுடன் பேச அவர் நமக்கு உதவி செய்வார். அவர் நம் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்வார்.

மிகவும் கவனத்துடன் நாம் என்ன பேசுகிறோம் என்றும், நாம் பேச வேண்டியவை இன்னது என்று கேட்டு ஜெபிக்கும்பொழுதும், நாம் பேசும் முறைகளைக் கட்டுப்படுத்தி பேசப்பழகும்பொழுது, தேவன் நமக்கு பொறுமையுடன் கற்றுத்தருவதோடல்லாது நம் சுயத்தைக் கட்டுப்படுத்த வல்லமையையும் தருகிறார். எல்லாவற்றிற்கும் மேலானது என்னவென்றால், நாம் தவறும்பொழுது நம்மை மன்னிக்கிறார். நாம் அவர் உதவியை நாடவிரும்பும் பொழுது மகிழ்ச்சியடைகிறார் என்பதே.