அவள் தன்னைத்தானே “கவலைப்படுபவள்” என்று அழைத்துக்கொண்டாள், ஆனால் அவள் குழந்தை ஓர் விபத்தில் காயப்பட்ட பொழுது அந்தப் பெயரிலிருந்து தன்னை எவ்வாறு விடுவித்துக் கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டாள். அவள் பிள்ளை சுகமடைந்து வரும்பொழுது, ஒவ்வொரு வாரமும் சிநேகிதருடன் பேசவும், ஜெபிக்கவும் கூடிவந்து தேவனிடமிருந்து உதவியையும், சுகத்தையும் வேண்டி நின்றாள். பல மாதங்களாக இவ்வாறு தன் பயத்தையும், தேவைகளையும் தேவனிடத்தில் வைத்தபொழுது, தான் ஓர் “கவலைப்படுபவளாக” இருந்த நிலையிலிருந்து “ஜெபவீராங்கனையாக”மாறுவதை உணர்ந்தாள். இந்த தேவையற்ற தலைவலி போன்ற போராட்டத்தால் தேவனோடு அவளுக்குள்ள ஐக்கியம் மிகவும் ஆழமாகியது.

பெர்கமு சபைக்கு இயேசு எழுதிய நிருபத்தில் “விசுவாசமுள்ளவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும் அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்ட புதிய நாமத்தையும் கொடுப்பேன்” என்று கூறுகிறார் (வெளி. 2:17). வேத வியாக்கியானிகள் வெள்ளைக் குறிக்கல்லின் அர்த்தத்தைக் குறித்து விவாதித்தார்கள். ஆனால், பெரும்பான்மையானவர்கள் அந்த வெள்ளைக்கல் என்பது கிறிஸ்துவுக்குள் நமக்குள்ள சுதந்தரத்தைக் குறிக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறார்கள். வேதாகமக் காலத்தில் நீதிமன்றத்தில் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்புக் கூறும்பொழுது வெள்ளைக்கல்லையும், குற்றம் புரிந்தவர்களுக்கு தீர்ப்புக் கூறும்பொழுது கருப்புக்கல்லையும் பயன்படுத்தினார்கள். சாலைக்குச் செல்பவர்களை வரவேற்பவர்கள் வெள்ளைக்கல்லைப் பயன்படுத்துவார்கள். இதேபோன்று தேவனுடைய வெள்ளைக் குறிகல்லைப் பெற்றவர்கள் பரலோக விருந்திற்கு வரவேற்கப்படுவார்கள். இயேசுவின் மரணம் நமக்கு விடுதலையையும் புது வாழ்வையும் புதிய நாமத்தையும் கொடுக்கிறது.

தேவன் உங்களுக்குக் கொடுக்கப்போகிற புதிய நாமத்தைப் பற்றி நீங்கள் நினைப்பது என்ன?