என் சிநேகிதி தான் தாயாகப்போவதை அறிவித்தபொழுது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து குழந்தை பிறக்கும்வரை உள்ள நாட்களை எண்ணினோம். பிரசவத்தின் பொழுது குழந்தைக்கு மூளையில் காயம் ஏற்பட்டதால் கஷ்டப்பட்டது. என் இதயம் நொறுங்கியது. எப்படி ஜெபிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் தேவனிடம் ஜெபிக்க வேண்டும் என்பதே. அவர் நமது பிதா; நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்பொழுது அவர் கேட்கிறார்.
தேவன் அற்புதங்களைச் செய்வதில் வல்லவர் என்பது எனக்குத் தெரியும். யவீருவின் மகளுக்கு ஜீவனை மீட்டுத்தந்தார் (லூக். 8:49–55). அந்தப் பெண்ணின் உயிரைப் பறித்த நோய் எந்தவிதமான நோயாக இருந்திருந்தாலும், மரணத்திலிருந்து அவளை மீட்டு, ஜீவன் கொடுத்தார். எனவே என் சிநேகிதியின் மகளுக்குக் சுகம் கொடுக்க வேண்டும் என்று ஜெபித்தேன்.
ஆனால் “தேவன் சுகமளிக்காவிட்டால்?” என்று சிந்தித்தேன். நிச்சயமாக அவரில் வல்லமை இல்லாமல் இல்லை. ஒருவேளை அவர் கரிசனை காட்டாமல் இருக்கலாமோ? இயேசு சிலுவையில் பட்ட பாடுகளையும் அதின் நமக்கு கிடைக்கும் பலனையும் சிந்தித்தேன். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோம. 5:8). பின்பு யோபுவினுடைய கேள்விகளையும், தன்னைச் சுற்றியுள்ள சிருஷ்டிகளில் தேவஞானம் வெளிப்படுவதை எவ்வாறு கற்றறிந்தான் என்பதையும் சிந்தித்துப் பார்த்தேன் (யோபு 38–39).
நம் வாழ்க்கையில் அனைத்துக் காரியங்களையும் அறிந்த தேவன் நம்மை எவ்வாறு தம்மண்டை அழைக்கிறார் என்பதை மெல்ல மெல்ல அறிந்து கொண்டேன். விளைவு எதுவாக இருந்தாலும் என் சிநேகிதியும் நானும், தேவனை நோக்கிக் கூப்பிடுவது என்பதும் அவரையே சார்ந்திருத்தல் என்பதன் அர்த்தம் என்ன என்பதையும் கற்றுக்கொண்டோம்.