கொடுமைக்கார மாற்றாந் தகப்பன், தன் மகன் டேவிட் காப்பர்ஃபீல்டை கொடுமைப்படுத்திய பொழுது சித்தி கோபாவேசத்துடன் அவரை எதிர்த்த காட்சி, இலக்கியத்தில் எனக்கு மிகவும் விருப்பமான காட்சிகளில் ஒன்றாகும். முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையே புத்தகத் தலைப்பாகக் கொண்ட சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “டேவிட் காப்பர்ஃபீல்ட்” கதையில் இக் காட்சி வருகிறது.
டேவிட் காப்பர்ஃபீல்ட் தன் சித்தி வீட்டிற்கு வந்த பொழுது அவனுடைய மாற்றாந் தந்தையும் அவனைத் தொடாந்து அங்கு வந்திருந்தார். தீய எண்ணம் கொண்ட திரு மர்ட்ஸ்டோனைப் பார்ப்பதற்கு சித்தி பெத்ஸி ட்ரோட்வுட்டுக்கு விருப்பமில்லை. மர்ட்ஸ்டோன் கடந்த காலத்தில் செய்த தவறுகள் எல்லாவற்றையும் வரிசையாகப் பட்டியலிட்டுக் காட்டி, அவருடைய கொடூரச் செய்கைகள் ஒவ்வொன்றின் பொறுப்பிலிருந்தும் அவன் நழுவிப்போய்விட முடியாது என்று சாடினாள். பொதுவாக தான் சொன்னது தான் சரி என்று எதிர்த்து நிற்கும் மர்ட்ஸ்டோன் அவனைக் கடுமையாகவும், நேர்மையாகவும் அவள் தாக்கிய பொழுதும் அவன் ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசாமல் போய்விட்டான். வலிமையும், நற்பண்புகளையும் கொண்ட தன் சித்தியின் நற்குணத்தால், இறுதியாக டேவிட்டுக்கு நீதி கிடைத்தது.
நாம் வாழும் உலகில் தினமும் தீயகாரியங்களையெல்லாம் நன்மையாகப் மாற்றப் போகிற வல்லமையான, நன்மை செய்கிறவருமாகிய ஒருவர் இருக்கிறார். இயேசு மறுபடியும் இப்பூமிக்கு வரும்பொழுது பரலோகத்திலிருந்து வலிமைமிக்க தூதர்களின் சேனையோடு வருவார். “உபத்திரப்படுபவர்களுக்கு இளைப்பாறுதலை அவர் தருவார். தம்முடைய பிள்ளைகளுக்கு உபத்திரவம் கொடுத்தவர்களை விட்டுவிடாமல் நியாமான தீர்ப்புச் செய்வார் (2 தெச 1:6-7). அந்த நாள் வரை நாம் உறுதியாகவும், தைரியத்துடனும் நிற்க விரும்புகிறார். இப்பூவுலகில் நாம் பாடுகளை சகித்துக் கொள்வது ஓர் பெரிய காரியமல்ல. நாம் நித்தியத்தில் வாழ பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதே மாபெரும் காரியம்.