2வது உலகமகா யுத்தத்தின் துவக்க காலத்தில் போலந்திலுள்ள வார்சா, ஆகாய மார்க்கமாக குண்டு மழை பொழிந்ததால் தரைமட்டமானது. சிமெண்ட் கட்டிகள், சிதைந்த நீர்குழாய்கள், கண்ணாடித்துண்டுகள் போன்றவை அந்த பெரு நகரத்தில் சிதறிக்கிடந்தது. நகரின் நிர்வாக வணிக அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் சிதைவுண்ட கட்டிடங்களில் ஒன்று இன்னும் அசையாது நிமிர்ந்து நிற்கிறது. அது ஆங்கிலேயே மற்றும் வெளிநாடுகளின் வேதாகம சங்கத்தின் “போலந்திலுள்ள தலைமைச் செயலகமாகும்.” வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை (மத் 24:35) என்ற வசனம் அங்கு சிதைந்து நிற்கும் சுவரில் மிகவும் தெளிவாக வாசிக்கக் கூடிய நிலையில் நிலைத்திருக்கிறது.
“உலகத்தின் முடிவு” காலத்தைப்பற்றி அவருடைய சீஷர்கள் அவரிடம் கேட்டபொழுது, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக இயேசு மேற்கூறிய வார்த்தைகளைக் கூறினார் (மத் 24:3) இன்றைய சூழ்நிலையிலும் போராட்டங்கள் மத்தியிலும் நம்மை ஊக்கப்படுத்துவதாக இவ்வசனம் காணப்படுகிறது. சிதைக்கப்பட்ட கனவுகளின் இடிபாடுகளின் மத்தியில் தேவனுடைய அழிக்கமுடியாத பண்புகள், இறைமைத்தன்மை, வாக்குத்தத்தங்கள் ஆகியவற்றை பற்றிக்கொண்டு அவர் மீது இன்னும் நம்பிக்கையுடையவர்களாயிருக்கலாம்.
“கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது” (சங் 119:89)ல் என்று சங்கீதக்காரன் எழுதியிருக்கிறான்.
இது தேவனுடைய வார்த்தை மாத்திரம் அல்ல, அதற்கும் மேலானது. அது அவருடைய பண்பும் ஆகும். அதனால்தான் “உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்” என்று சங்கீதக்காரனால் சொல்ல முடிகிறது (சங் 119:90).
அழிவுக்கு எத்தனமான அனுபவங்களை நாம் சந்திக்கும் பொழுது, அவற்றை நம்பிக்கையற்ற நிலை என்றோ அல்லது நம்பிக்கையுடையது என்றோ குறிப்பிடலாம். ஏனென்றால் தேவன் எந்தச் சூழ்நிலையிலும் நம்மைக் கைவிடமாட்டார். ஆகையால், நாம் தைரியமாக நம்பிக்கை என்ற பதத்தைத் தெரிந்தெடுக்கலாம். அவருடைய அழியாத வார்த்தை அவருடைய கைவிடாத அன்பை நமக்கு உறுதிப்படுத்துகிறது.