என் சிநேகிதியின் குழந்தையை வலிப்பு நோய் தாக்கியதால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் சென்றார்கள் தன் மகளுக்காக ஜெபித்துக் கொண்டே இருந்த சமயம் அவள் இதயம் வேகமாக பட, பட வென்று துடித்தது, பொங்கிவரும் பாசத்துடன் அந்தப் பிஞ்சுக் கரங்களைப் பற்றி பிடித்திருந்த பொழுது; நாம் தேவனுடைய கண்ணின் மணியைப் போல் அருமையாக இருப்பதால் அவர் எவ்வளவுக்கதிமாய் நம்மை நேசிக்கிறார் என்று சிந்திக்கலானாள்.

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து தேவ ஜனங்கள் விடுதலை பெற்று எருசலேமுக்கு திரும்பி வந்த பொழுது அவர்களை சகரியா தீர்க்கதரிசி தேவனுடைய கண்மணி என்றார். மனம் திரும்பவும், ஆலயத்தைத்திரும்பக் கட்டவும், உண்மையான தேவனிடம் தங்கள் அன்பைப் புதுப்பித்துக் கொள்ளவும் அவர்களை அழைத்தார். தேவன் தம் ஜனங்களை அதிகமாய் நேசிக்கிறார். அவர்கள் அவருடைய கண்ணின் மணிகள். “ஆப்பிள்” கோளவடிவத்தில் இருப்பதால் கண்விழியை ‘ஆப்பிள்’ என அழைக்கிறார்கள். ஒருவருடைய கண்மணியில் அடுத்தவருடைய பிம்பம் பிரதிபலிப்பதை சகரியா குறிப்பிடுகிறார் ஏன்று கூறுகிறார்கள். கண்கள் விலையேறப்பெற்றவை மிகவும் மென்மைத்தன்மையுடையனவாகவும் இருப்பதால் அவற்றிக்குப் பாதுகாப்பு அவசியம், அவ்வாறு தான் தேவன் மக்களை நேசித்து தம் மார்போடணைத்து நம்மைப் பாதுகாக்க விரும்புகிறார்

சுகவீனமாக இருக்கும் தன் குழந்தையை நேசிக்கும் தாய், தன்னால் இயன்ற மட்டும் தன் அன்பைச் சொரிந்து அக்குழந்தையை நேசிக்கும் நேசத்தைவிட நம் மத்தியில் வாசம் செய்யும் தேவன் நம்மேல் தம் அன்பை பொழிகிறார். நாம் அவருக்கு மிகவும் அருமையான அவருடைய கண்ணின் மணிகள்.