20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த W.T. ஸ்டெட், புதுமைக் கருத்துக்களை கொண்ட ஓர் ஆங்கில பத்திரிக்கை எழுத்தாளர். சமுதாயப் பிரச்சனைகளில் காணப்படும் தர்க்கத்திற்குறியதான காரியங்களைப் பற்றி எழுதுவதில் சிறந்து விளங்கினார். அவர் எழுதி வெளியிட்ட கட்டுரைகளில் இரண்டு கப்பல் பயணம் செய்வோருக்கும், அவர்களின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு படகுகளின் விகிதத்தில் குறைந்த எண்ணிக்கையுடைய படகுகளுடன் கப்பல்கள் பயணம் செய்வதன் ஆபத்தைக் குறித்து அறிவித்திருந்தார். 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் வட அட்லாண்டிக் பகுதியில் பயணம் செய்த டைட்டானிக் கப்பல் பனிக்கட்டிப் பாறையில் மோதிச் சிதறிய கப்பலில், துரதிஷ்டவசமாக ஸ்டெட்டும் பயணித்தார். வெளிவந்த ஓர் அறிக்கையின்படி, பெண்களையும், சிறுபிள்ளைகளையும், பாதுகாப்புப் படகில் ஏற உதவியதுடன் தன் பாதுகாப்பு மேல் சட்டையைக் கொடுத்தது. பாதுகாப்புப் படகில் தன் இடத்தையும் பிறருக்கு கொடுத்து தன் உயிரையே ஸ்டெட் தியாகம் செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.
நம்மை உலுக்கும் தன்னலமற்ற ஓர் தியாகத்தையும் நாம் அறிவோம். அப்படிப் தியாகத்திற்கு கிறிஸ்துவைத் தவிர மேலான முன் மாதிரியை நாம் எங்கும் காணமுடியாது. “இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி. என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து… பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார் (எபி 10:12-14) என்று எபிரேயர் நிருபத்தில் ஆக்கியோன் கூறுகிறார். இந்தப் பெரிய தியாகபலியை விவரிக்கும் வார்த்தைகளால், பவுல் கலாத்தியருக்கு எழுதின தன் நிருபத்தைத் துவக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து… நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்தார் (கலா 1:3,4).
நமக்கு பதிலீடாக இயேசு தம்மைத் தாமே பலியாக ஒப்புக்கொடுத்தது நம்மீது அவர் கொண்டுள்ள அளவற்ற அன்பைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தியாகபலி இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அது அனைத்து மனுக்குலத்தையும் பாவத்தினின்று மீட்டு, அவருடன் நித்தியத்தில் என்றும் வாழவதற்கான அச்சாரத்தையும் கெடுக்கிறது.