1940ம் ஆண்டு டெக்ஸாஸில் உள்ள அபிலெனில் முதல் பெண் மருத்துவரான 27 வயதுள்ள டாக்டர். வெர்ஜீனியா கோனலி பல எதிர்ப்புகளையும், விமரிசனங்களையும் தைரியத்துடன் சந்தித்தார். 2012ம் ஆண்டு அவருடைய 100வது பிறந்த நாளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் டெக்சாஸ் மருத்துவச் சங்கம் அவருடைய புகழ்மிக்க சேவைக்காக டெக்சாஸின் மதிப்பு மிக்க மருத்துவர் என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தது. இந்த இரு குறிப்பிடத்தக்க கால கட்டங்களுக்கிடையே கோனலி, மிகவும் உற்சாகத்துடன் உலகமுழுவதும் சுவிசேஷத்தை பரப்பும் தாகத்தைப் பெற்றவராய், மருத்துவப் பணிப் பயணங்களை மேற்கொண்டு சேவையையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு தேவனுக்கும், பிறருக்கும் பயனுள்ளவராக வாழ்ந்தார். அந்தந்த நாளுக்கு அதினதன் பாடு போதும்.
Dr. கோனலியின் போதகர் ஃபில் கிறிஸ்டோபர் “அவருக்கு ஒவ்வொரு நாளும் ஓர் ஈவாகக் காணப்பட்டது” என்று கூறுகிறார். “ஒவ்வொரு நீண்ட பயணத்தின், சிறு பயணத்தின் முயற்சியின் போதும் இதுவே என் கடைசியும் இறுதியுமாக இருக்குமோ? என்று ஆச்சரியப்படுவேன். அதை தேவன் மாத்திரம் அறிவார். அதுவே எனக்குப் போதும்” என்று கோனலி தனக்கு எழுதிய கடிதத்தை போதகர் நினைவு கூர்ந்தார்.
“இது கர்த்தர் உண்டு பண்ணிய நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம் (சங் 118:24) என்று சங்கீதக்காரன் எழுதியிருக்கிறார். நேற்றைய தினத்தின் ஏமாற்றங்களையும், நாளைய தினத்தின் நிலையற்ற தன்மைகளையுமே நாம் சிந்தித்துக் கொண்டேயிருந்து, நம் தேவன் நமக்கு தந்துள்ள எண்ணிமுடியாத ஆசீர்வாதங்களை இழந்து விடுகிறோம் இன்று!
நீங்கள் விசுவாச வாழ்க்கை வாழும் பொழுது நாளை என்ன நிகழும் என்று எதிர் நோக்கியிருக்கமாட்டீர்கள். என வாழ்க்கையிலும், என் உள்ளத்திலும் தேவன் வைத்திருக்கிற திட்டத்தை நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று கிறிஸ்துவுடன் பயணம் செய்யும் Dr. கோனலி கூறுகிறார்.
இன்றைய தினத்தை தேவன் உருவாக்கியிருக்கிறார். அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அவருடைய நாமத்தில் நமக்குச் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் பிறருக்கு சேவை செய்வோமாக!