அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள தென் கலிஃபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் அனைவரின் மனதில் தோன்றும் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் “டின்செல்டவுன்”க்கு சிமெண்டால் செய்யப்பட்ட நட்சத்திரங்களின் கால் தடங்களைப் பார்க்கவும், அவ்வழியாகக் கடந்து செல்லும் பிரபலங்களை ஓர் முறை பார்க்கவும் வருகிறார்கள். இவ்வாறு வரும் பார்வையாளர், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மற்றுமோர் அடையாளத்தையும் பார்க்காமல் இருக்கவே முடியாது.
ஹாலிவுட் மலைகளில் இலகுவாகக் கண்டு கொள்ளக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற சின்னமாக, நித்தியத்தை முக்கியப்படுத்திக் காட்டும் அடையாளம் ஒன்று அங்கு உண்டு அது “ஹாலிவுட் புனிதப்பயண நினைவுச்சின்னம்” என்று அழைக்கப்படும், நகரை நோக்கிப் பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கும் 32 அடி உயரமுள்ள சிலுவை. 1920களில் பில்கிரிமேஜ் தியேட்டர் (அரங்கம்) (தற்சமயம் ஜான் ஆன்சன் ஃபோர்ட் தியேட்டர்) என்று அழைக்கப்படும் அரங்கத்தை கிறிஸ்டைன் வித்தரில் ஸ்டீவன்சன் என்ற செல்வச் சீமாட்டியின் ஞாபகார்த்தமாக இச் சிலுவை அவ்விடத்தில் அமைக்கப்பட்டது. கிறிஸ்துவைப் பற்றிய (பில்கிரிமேஜ் ப்ளே) புனித பயணம் என்ற நாடகத்தை நடத்தும் இடமாக அது விளங்கியது.
இந்த இரு சின்னங்களும் எதிர் மறையான காட்சிப் பொருளாக நம் கவனத்தை ஈர்க்கின்றன. நன்மையான, தீமையான திரைப்படங்கள் வரும், போகும். அவற்றின் பொழுது போக்கின் தரம், கலைத்திறனின் பங்களிப்பு, உகந்த தன்மை போன்றவை எப்படியும் தற்காலிகமனவையே.
ஆனால் சிலுவை நித்திய நம்பிக்கைக்குரிய ஓர் நிகழ்ச்சியை நமக்கு ஞாபகப்படுத்துகிறது தேவன் அளிக்கும் பூரண மன்னிப்பை நாம் பெற்றுக்கொள்ள, தேவன் நம்மைத் தொடர்ந்து வந்து நம்மை அழைக்கும் கிறிஸ்துவின் அன்பின் கிரியையை விளக்கும் அன்பின் தேவனின் சரிதை ஆகும். மாபெரும் நிகழ்ச்சியான இயேசுவின் மரணம் வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அவருடைய உயிர்த்தெழுதல் மரணத்தின் மேல் வெற்றி சிறத்தால் நம் அனைவரிடமும் நித்தியமான ஓர் தாக்த்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலுவை ஒருபோதும் தன் கருத்தையும், வல்லமையையும் இழக்க முடியாது.