ஒருக்காலும் கைவிடப்படவில்லை
ஃபையோடர் டோஸ்டோவிஸ்கி என்ற ரஷ்ய எழுத்தாளர் “ஒரு சமுதாயத்துடைய நாகரீகத்தின் முன்னேற்றத்தின் அளவை அங்குள்ள சிறைச்சாலைகளுக்குச் சென்று பார்ப்பதின் மூலம் தீர்மானிக்கலாம்” என்று கூறினார். அந்த விளக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு, “உலகில் உள்ள சிறைகளில் மிகவும் பயங்கரமான 8 சிறைகள்” பற்றி கணிப் பொறியில் இணைக்கப்பட்டு வெளியான செய்தி ஒன்றை வாசித்தேன். இந்த 8 சிறைகளில் குறிப்பிட்ட ஒரு சிறையில் ஒவ்வொரு கைதியும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
நாம் ஒரு சமுதாயமாக, ஒருவரோடொருவர் உறவு கொண்டு வாழ உருவாக்கப்பட்டுள்ளோமே ஒழிய, தனிமையில் வாழ…
மூன்று வார்த்தை மரண அறிவிப்பு
ஸ்டிக் கெர்னல் மரிக்கும் முன்பு, உள்ளுரில் உள்ள இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தின் பொறுப்பாளரிடம், தான் இறந்தபின்பு, தன்னைப் பற்றிய வழக்கமான இறப்பு செய்தியை அவர் விரும்பவில்லை என்று கூறினார். அதற்குப் பதிலாக அவர் இறந்த செய்தியை அறிவிக்கும்பொழுது, “நான் மரித்து விட்டேன்” என்ற மூன்றே வார்த்தைகளில் அறிவிக்க வேண்டும் என்று சுவீடன் நாட்டைச் சேர்ந்த கெர்னல் கேட்டுக் கொண்டார். கெர்னல் அவரது 92வது வயதில் மரித்த பொழுது செய்தித் தாள்களில் அவரது இறப்பு பற்றி மேலே கூறப்பட்ட மூன்றே வார்த்தைகளே வெளிவந்தன. வழக்கத்திற்கு…
ஒலிவ எண்ணெய்க் செக்கு
கலிலேயாக் கடலில் அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு நீங்கள் சென்றால், பழங்காலத்து ஒலிவச் செக்குகள் பலவற்றை நீங்கள் பார்க்கலாம். அவைகள் எரிமலைகளிலிருந்து கிடைக்க கூடிய கரும்பாறைகளால் செய்யப்பட்டிருக்கும். அதில் ஒரு குழியுடன் கூடிய வட்டவடிவமான பெரிய அடிப்பாகமும், ஒலிவக் காய்களை அரைக்கக் கூடிய அரைக்கும் சக்கரமும் காணப்படும். அந்த குழிக்குள்ளாக ஒலிவக் காய்கள் போடப்பட்டு கடினமான கல்லினால் செய்யப்பட்டுள்ள அரவைச் சக்கரங்களால் அரைக்கப்படும். அவ்வாறு அரைக்கப்படும்பொழுது காய்களிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.
இயேசு மரணமடைந்த நாளிற்கு முந்தினநாள், எருசலேமிற்கு அருகில் இருந்த ஒலிவமலைக்கு போனார். அங்கு கெத்சமனே…
மரக்குடிசையில் கூறும் கதைகள்
அந்தப் பழைய மரக்குடிசை கைகளினால் இழைக்கப்பட்ட மரக்கட்டைகளால் கட்டப்பட்டு இருந்தது. மாதந்திரப் பத்திரிக்கைகளில் முன்பக்க அட்டையில் போடக் கூடியது போன்ற மிகவும் அழகான குடிசையாக இருந்தது. அதன் வெளிப்புறம் அதனுடைய உண்மையான மதிப்பினை முழுவதுமாக வெளிப்படுத்தவில்லை. அக்குடிசையின் உள்பக்கமாக அதனுடைய சுவரில், தொங்கவிடப் பட்டிருந்த அநேக விலை மதிப்புள்ள பொருட்கள் அக்குடும்பத்திற்கே சொந்தமானவைகளாகும். அவைகள் அனைத்தும் வீட்டில் உள்ளவர்களின் நினைவலைகளைத் தூண்டக் கூடியவைகளாக இருந்தன. மேஜையின் மேல் கைகளினால் பின்னப்பட்ட முட்டை வைக்கும் கூடை, பழங்கால பிஸ்கட் தட்டு, மேலும் ஓர் எண்ணெய் விளக்கு…