அநேக ஆண்டுகளுக்கு முன்பாக பாஸ்டன் நகரில் எனக்கு ஓர் அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகம் அநேக முக்கியமான அமெரிக்கத் தலைவர்கள் அடக்கம் பண்ணப்பட்டிருந்த கிரானரி கல்லறைத் தோட்டத்தை நோக்கி இருந்தது. அமெரிக்க சுதந்தரத்தை அறிக்கையிடும் பாடலை இயற்றி, பாடின ஜான் ஹேன்ஹாக், சாமுவேல் ஆதாம் அவர்களின் கல்லறைகளையும் அலுவலகத்திலிருந்தே பார்க்கலாம். அங்கிருந்து சில அடிதூரத்தில் பால்ரெவர் என்று குறிக்கப்பட்ட அடையாளக் கல்லையும் பார்க்கலாம்.
ஆனால் அந்தக் கல்லறைத் தோட்டத்தில் யாருடைய உடல் எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அந்தக் கல்லறைத் தோட்டத்தை மிகவும் அழகுள்ளதாக்கவும், புல்வெட்டும் கருவி இரண்டு கல்லறைகளுக்கு இடையில் செல்லத்தக்கதாகவும், கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பொறித்த கற்கள் பல முறை அகற்றப்பட்டிருந்தன. கிரானரி கல்லறைத் தோட்டத்தில் ஏறக்குறைய 2300 கல்லறைக்கற்கள் தான் இன்று உண்டு. ஆனால் அங்கு 5000 பேர் அடக்கம் பண்ணப்பட்டிப்பார்கள். மரணத்தில் கூட சில மனிதர்கள் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள்.
நாமும் கூட பலமுறை அந்த கிரானரி கல்லறைத் தோட்டத்தில், பெயர்க்குறிக்கப்படாமல் அடக்கம் பண்ணப்பட்டவர்களைப் போன்று அறியப்படாதவர்களாக இருப்பதை உணரலாம். தனிமை என்ற உணர்வு நம்மை பிறரிடமிருந்து தனிமைப்படுத்தி விடும். யாரும் நம்மை கவனிக்கவில்லை என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். தேவன் கூட நம்மை கவனிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றும். நம்டைய சிருஷ்டிகரான தேவனால் மறக்கப்பட்டுவிட்டோமென்று நாம் உணர்ந்தாலும் நாம் தேவனால் மறக்கப்படவில்லை என்பதை நமக்கு நாமே நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவன் நம்மை அவருடைய சாயலில் சிருஷ்டித்தது மட்டுமல்லாமல் (ஆதி 1:26-27) நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட நபராக மதித்து, நம்மை மீட்க அவரது குமாரனை அனுப்பினார் (யோவா 3:16).
இருள் சூழ்ந்த நேரங்களிலும் நாம் ஒருக்காலும் தனிமையாக இல்லை என்று நாம் அறிந்திருப்பதை நம்பி வாழ்வோம். நமது அன்பின் தேவன் நம்மோடு கூட இருக்கிறார்.