எங்கள் இடமோ பள்ளத்தாக்கு. குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருக்கும். மேகமும், மூடுபனியும் பரவி தரையில் உஷ்ணமான பகுதிக்கு கீழ் குளிர்காற்று இருக்கும்படி செய்யும். ஆனால் நீங்கள் இந்த குளிர்காற்றுக்கு மேலே வந்துவிடலாம். எங்கள் பள்ளத்தாக்கிலிருந்து 7500 அடி உயரமுள்ள ஷாஃபர் பூட் மலையின் பக்கவாட்டில் சுற்றிச் சுற்றிச் செல்லும் ஓர் சாலை அருகாமையில் உள்ளது. சில நிமிடங்கள் காரில் பயணித்தால் மூடு பனியிலிருந்து வெளியேறி, பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரிய ஒளிக்கு வந்து இதமான சூட்டை உணரலாம். மலைமேலிருந்து குனிந்து கீழே பள்ளத்தாக்கை மூடியிருக்கும் மேகத்தின் ஊடாக வேறொரு கோணத்தில் பள்ளத்தாக்கின் தோற்றத்தைப் பார்க்கலாம்.
சில சமயங்களில் வாழ்க்கையும் அவ்வாறு தான் தோற்றமளிக்கிறது. சூழ்நிலைகள் பல நம்மை சூழ பனிமூட்டம் போல் மூடிக் கொண்டு, சூரிய ஒளி ஊடுருவிச் செல்லாதவாறு மறைத்துக் கொள்கிறது. ஆனால் விசுவாசம் என்னும் பாதை வழியாக அந்தக் பள்ளத்தாக்கை விட்டு மேலே வந்துவிடலாம். இவ்வாறு தான் நாம் இருதயத்தை “மேலானவைகளை நாடிச்” செல்லுமாறு செய்ய வேண்டும் (கொலே 3: 1).
நாம் அவ்வாறு செய்யும் பொழுது எல்லா சூழ்நிலைகளையும் கடந்து அதை மேற் கொள்ளவும், அந்த நாளுக்குத் தேவையான தைரியத்தையும், அமைதியையும் தேவன் தருகிறார். “எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன்” (பிலிப்பியர் 4: 11) என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகிறார்.
நாம் வேதனைகளிலிருந்து, இருண்ட சூழ்நிலைகளிலிருந்தும் மேலே வரமுடியும். நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலம் (வச. 13) மலையின் ஓர் பக்கத்தில் அமர்ந்து வேறு விதமான தோற்றத்தைக் காணலாம்.