காரோட்டியின் முன் அமைந்துள்ள காற்றுத்தடுப்பான் கண்ணாடியின் மீது விழும் மழை நீரை அகற்றும் கருவி முன்னும் பின்னும் திவிப், திவித், த்தால் (கல்ப்) என்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டு நீரைத் துடைத்தது நான் சமீபத்தில் தான் வாங்கிய 80,000 மைல்கள் ஒடியதும், சிறு பிள்ளைகள் பாதுகாப்பாக அமர பக்கவாட்டில் அமைந்திருக்கும் காற்றுப்பையுடன் கூடிய இருக்கையும் இல்லாத ‘வால்வோ ஸ்டேஷன் வாகன்’ என்ற காரை அனுசரித்து ஒட்டியது எனக்கு இன்னும் கொஞ்சம் எரிச்சலைக் கூட்டியது.

இந்த ஸ்டேஷன் வாகன் காரை வாங்கவும், வீட்டு பலசரக்கு வாங்கவும் மிகவும் அத்தியாவசியமாக பணம் தேவைப்பட்டதால் நான் “பொக்கிஷமாக” வைத்திருந்த பக்கவாட்டில் சிறு பிள்ளைகள் பாதுகாப்புடன் அமர காற்றுப் பையின் கூடிய இருக்கையையும் உடைய “1992 வோல்வா ஸ்டேஷன் வாகனை விற்று விட்டேன். இப்படியாக அடுத்தடுத்து எல்லாம் போய் விட்டது. உயிருக்கே ஆபத்தைக் கொடுக்கக் கூடிய நோயின் தாக்கத்தினால், சமாளிக்க இயலாத மருத்துவச் செலவின் பழுவினால் எங்கள் வீடு, எங்கள் சேமிப்பு அனைத்தும் கரைந்து விட்டது.
“சரி, தேவனே” பக்கவாட்டில் யாரேனும் இடித்தால் ஏற்படும் ஆபத்திலிருந்து என் சிறு பிள்ளைகளைக் பாதுகாக்க என்னால் இப்பொழது இயலாது. ஏதேனும் அசம்பாவிதம் அவர்களுக்கு நேர்ந்தால், நான் என்ன செய்வேன் என்றும் எனக்கு தெரியாது என்று உம்மிடம் சொல்கிறேன். திவிப், திவித், த்தால் (கல்ப்) என்று நான் சத்தமாகக் கூறினேன்.

உடனே என் செயலுக்காக வெட்கப்பட்டேன். கடந்த 2 ஆண்டு காலத்தில் தேவன் என் மனைவியையும், என் மகனையும் மயிரிழையில் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியிருந்தார். ஆனாலும், நான் இழந்த “பொருட்களைக்” குறித்து அழுது புலம்பிக் கொண்டிருந்தேன். என்னை இரட்சிப்பதற்காகத் தம் சொந்தக் குமாரனையே பலியாகத் தியாகம் செய்த பிதா, உண்மையிலே ஓர் அதிசயக்கத்தக்க விதத்தில் என் மகனின் ஜீவனைத் தப்புவித்தார்.

“தகப்பனே என்னை மன்னியும்” என்று ஜெபித்தேன். மகனை ஏற்கனவே மன்னித்துவிட்டேன்.