15 வயதான வில்சன் பென்ட்லே, விளங்கிக் கொள்ள முடியாத பனித் துகள்களின் அழகினால் கவரப்பட்டான். அவனுடைய தாய் அவனுக்குக் கொடுத்த ஓர் பழைய மைக்கிராஸ்கோப்பினால் மிகவும் ஆவலுடன் அவற்றைப் பார்த்து நூற்றுக்கனக்கான சிறப்புமிக்க கலைச் சித்திரங்களை வரைபடமாக்கினான். ஆனால் அவற்றை தெளிவாக பார்க்கும் முன் மிகச் சீக்கிரத்தில் உருகிவிடும். பல ஆண்டுகளுக்குப் பின் 1885ம் ஆண்டு அவருக்கு ஓர் எண்ணம் உதித்தது காற்றுத் துருத்தியுடன் கூடிய ஓர் காமராவை மைக்கிராஸ்கோப்புடன் இணைந்து பலவித தோல்விகளுக்கு இடையே முயற்சித்து பனித்துகளின் முதல் புகைப் படத்தை எடுத்தார். பென்ட்லே தன் வாழ்நாட் காலத்தில் 5000 துகள்களின் படத்தை எடுப்பார். அவை ஒவ்வொன்றும் தனக்கு உரிய தனித் தன்மை கொண்ட கலைச்சித்திர அமைப்புடையவனாகக் காணப்பட்டன. அவர் அவற்றை “அழகின் மிகச்சிறிய அற்புதம்” என்றும் ‘பனிப்பூக்கள்’ என்றும் வர்ணித்தார்.

எல்லாப் பனித்துகள்களும் ஒரே இடத்தில் உற்பத்தியாகி வந்தாலும், இரண்டு பனித்துகள் ஒன்று போல காணப்படவில்லை. இதே போன்றுதான் கிறிஸ்துவைப் பின் பற்றுபவர்களாகிய நாம் அனைவரும் ஒரே சிருஷ்டிகரும், இரட்சகரிடமிருந்து தான் தோன்றியிருக்கிறோம். ஆனால் நாம் அனைவரும் வேறுபட்டுக் காணப்படுகிறோம். தேவன் தம் மகிமை நிறைந்த திட்டத்தின் கீழ் பலதரப்பட்ட மக்களைத் தெரிந்தெடுத்து ஒன்றாக இணைத்து வெவ்வேறு விதமான வரங்களைப் பகிர்ந்தளித்துள்ளார். விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள வெவ்வேறான வரங்களைப்பற்றி விவரிக்கும் பொழுது “வரங்களில் வித்தியாசங்களுண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசமுண்டு கர்த்தர் ஒருவர். கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும், எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே” (1 கொரிந்தியர் 12: 4-6).

வெவ்வேறு விதமான தனித்தன்மையுடைய வரங்களை தேவன் பகிர்ந்தளித்துள்ளபடியால் நாம் பிறருக்கு உதவும் பொழுதும், சேவை செய்யும் பொழுதும் அந்த வரங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தலாம்.