Archives: ஜனவரி 2016

பரலோகத்தின் வாசல்கள்

இத்தாலி நாட்டின் பிளாரண்ஸ் பேப்டிஸ்டரி (Florence Baptistery) தேவாலயத்தின் கதவுகளில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை மிக நேர்த்தியாய் இத்தாலியக் கலைஞர் லாரண்ஸோ கைபர்டி (Lorenzo Ghiberti, 1378-1455) என்ற சிற்பி பல ஆண்டுகள் செலவழித்து செதுக்கியிருந்தார். அந்த வெண்கலப் படைப்பின் மகத்துவத்தைக் கண்ட மைக்கேல்ஏஞ்சலோ அவற்றை பலலோகத்தின் வாசல்கள் என்று அழைத்தார்.

அக்கதவுகள் வருகிறவர்களை, சுவிசேஷத்தைப் பிரதிபலித்து வரவேற்கும் ஓர் உன்னதக் கலைப் புதையலாகத் திகழ்கிறது. இயேசு கிறிஸ்து, “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்” (யோவான் 10: 9)…

பற்றிக்கொள்!

டெக்சாஸ் (Texas) மாநிலத்திலுள்ள கால்நடைப்பண்னையில் வளர்ந்த என்னுடைய நண்பன் (cowboy), அடிக்கடி ஏதாவது ஒரு பழமொழி கூறுவான். அவற்றில், “நல்ல காஃபி செய்ய அதிக தண்ணீர் தேவைப்படாது” என்பது எனக்கு பிடித்த பழமொழி. ஒருவேளை, சில சமயம் யாராவது, தங்களால் அடக்க முடியாத இளங்காளையோடு போராடிக் கொண்டிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனையிலிருந்தாலோ, “உனக்குள்ளதை முழுமையாக பற்றிக்கொள். அதாவது, விட்டுவிடாதே! உதவி வருகிறது” என்னும் அர்த்தத்தில் கூக்குரலிடுவான்.

வெளிப்படுத்தின விசேஷத்தில், ஆசியாவிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்களைக் காணலாம் (2-3 அதிகாரங்கள்). தேவன், முதலாம்…

உனக்கு மதிப்பு உண்டு

என்னுடைய மனைவியின் தாயார் இறந்த பிறகு, அவருடைய வீட்டில், பத்திரமாக வைக்கப்பட்டிருந்த பழைய அமெரிக்க இந்தியர்களின் தலை பொறிக்கப்பட்ட நாணயங்கள் சிலவற்றைக் கண்டடைந்தோம். என் மாமியார் நாணயங்களை சேகரிக்கும் பழக்கத்தை உடையவரல்ல. இருப்பினும், அவர் அந்த நாணயங்கள் பழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்ததால் அவை அவரிடம் இருந்தன.

சிலவற்றைத் தவிர அவற்றில் பெரும்பாலான நாணயங்கள் நல்ல தரத்தில் இல்லை. அவற்றில் பொறிக்கப்பட்ட முத்திரைகளே மழுங்கி போகும் அளவுக்கு அவை பழையதாயிருந்தன. எல்லா நாணயங்களிலும், ஒரு செண்ட் (One Cent) என பொறிக்கப்பட்டிருந்தது. இக்காலத்தில், ஒரு…

மெய்யான புகலிடம்

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்கள் ஊரிலுள்ள பழங்குடியினர் மத்தியிலே ஏற்பட்ட மோதலினால், என் தகப்பனாருடைய குடும்பம் அகதிகளுடன் அகதியாய், தலைநகரில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதுகாப்பற்ற தங்கள் சொந்த ஊர்களை விட்டு பாதுகாப்பைத் தேடி பிற இடங்களுக்கு மக்கள் சென்றதை வரலாற்றிலே நாம் காணலாம்.

என் ஜனத்தை சந்தித்து விசாரித்து கொண்டிருக்கையில், யோசுவா 20: 1-9ல் குறிப்பிட்டுள்ள அடைக்கலப் பட்டணங்களைத் குறித்து சிந்தித்தேன். திட்டமிடாமல் தவறுதலாய் ஏற்பட்ட மரணத்தினிமித்தம் பழிவாங்க எத்தனிக்கும் உறவினர்களிடம் இருந்து தப்பித்து தஞ்சம்புகும்படியாய் இப்பட்டணங்கள் நியமிக்கப்பட்டிருந்தன…