எங்கள் மகன் ஊதாரித்தனமாய் இருந்த காலக்கட்டத்தில், சபையில் ஆராதனை முடிந்து வெளியே வந்த சமயம், என்னுடைய நண்பர் ஒருவர் என்னைத் தனியே அழைத்து, “நான் உனக்காகவும் உன் மகனுக்காகவும் தினந்தோறும் ஜெபிக்கிறேன். ஆனால் எனக்கு குற்ற உணர்வு உள்ளது” என்றார்.
நான் ஏன்? என்றதற்கு.
“ஏனென்றால் ஊதாரித்தனமான பிள்ளைகளை சமாளிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. என் பிள்ளைகள் ஒரளவு ஒழுங்கு முறைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டார்கள். ஆனால் அது நான் ஏதோ செய்ததாலோ செய்யாததாலோ அல்ல. ஏனென்றால் பிள்ளைகள் தாங்களாகவே தீர்மானிக்கிறார்கள்” என்றார்.
இதை கேட்டு அவரை கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. என் மகனுடனான என்னுடைய போராட்டத்தை பிதா அறிந்திருக்கிறார் என்ற வெளிப்பாட்டை தேவன்தாமே, இவருடைய ஆறுதலான வார்த்தைகள் மூலம் எனக்கு நினைவு படுத்தினார்.
தான்தோன்றித்தனமான பிள்ளைகளுடனான நமது போராட்டத்தை நம்முடைய பிதாவைவிட வேறொருவரும் முழுமையாய் அறிந்திருக்க முடியாது. லூக்கா 15 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்ட அந்த ஊதாரி மகனின் கதை நம்முடைய கதைமட்டுமல்ல, அது பிதாவின் கதையும் கூட. பாவிகள் எல்லாரும் தமது சிருஷ்டிகரின் அன்பு நிறைந்த உறவின் அரவணைப்புக்குள் தீவிரமாய் வந்து சேரும்படியாய் இயேசுதாமே பாவிளுக்காக இக்கதையை சொன்னார்.
மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசு தாமே தூரத்தில் நாம் வரும்பொழுதே நம்மைக்கண்டு இரக்கத்தினால் நிறைந்து விரைந்து ஓடோடி வந்து நம்மை தம்முடைய கரங்களினால் கட்டி அனைத்துக்கொள்கிறார். மனந்திரும்பின பாவியை நல்வரவேற்கும் பரலோக முத்தம் அவரே (வச. 20).
நமது வருகைக்காக வாசலண்டை விளக்கை மாத்திரம் எரியச்செய்யவில்லை, அவரே அவ்வாசலண்டை நின்று, நம் வருகையை எதிர்பார்த்து, காத்திருக்கிறார். நம்மை வீட்டிற்கு அழைக்கிறார்.