பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவத்தை பற்றி எழுதியிருந்தேன். அதைக் குறித்து “அனுதின மன்னா” வாசகர் ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘அந்த துயர சம்பவத்தை நீங்கள் கூறின போது தான், இதன் ஆசிரியர்கள் அனைவரும் நிஜ பிரச்சனைகளையுடைய நிஜ மனிதர்கள் என்பது உணர்ந்தேன்’, என எழுதியிருந்தார். இது எவ்வளவு உண்மையான கூற்று! இந்த கட்டுரைகளை எழுதும் ஆண், பெண் அனைவரையும் கண்டால், புற்றுநோய், அடங்காப் பிள்ளைகள், நிறைவேறாத கனவுகள் மற்றும் பல வகையான இழப்புகளைக் காணலாம். நம்முடைய உண்மையான பிரச்சனைகளை அறிந்த உண்மை தேவனை பற்றி எழுதும் சராசரி நிஜ மனிதர்கள் நாங்கள்.

சராசரியான நிஜ மனிதர்களின் வாழ்வரங்கத்தில் மேலோங்கி நிற்பவன் அப்போஸ்தலனாகிய பவுல். சரீர பிரச்சனைகள், சட்ட சிக்கல்கள், உறவு சார்ந்த போராட்டங்கள் போன்றவற்றை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இவை அனைத்தின் மத்தியிலும் அவர் நமக்கு ஒரு எடுத்துக்காட்டாய் விலங்கினார். “சகோதரரே நீங்கள் என்னோடே கூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்” என பிலிப்பியர் 3:17ல் கூறியுள்ளார்.

சுவிசேஷத்தின் தேவையுள்ளவர்கள், இயேசு தேவையுள்ளவர்கள் நம்மைச் சுற்றி அநேகம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு இயேசுவிடம் வழிகாட்ட உண்மையான சராசரி மனிதர்களை இவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதன் அர்த்தம் உண்மையுள்ள சராசரி மனிதர்களாய் நாம் இருக்க வேண்டும்.