1963 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று திபெத்தில் (Tibet) பிறந்த ஷெர்பா நவாங் கோம்பு (Sherpa Mawang Gompu) மற்றும் ஜிம் விட்டேக்கர் (Jim Whitaker) என்ற அமெரிக்கர், எவரெஸ்ட் மலையின் உச்சியை சென்றடைந்தனர். உச்சியை நோக்கிச் செல்கையில், முதலாவதாக அங்கு செல்லும் நபருக்கு கிட்டும் கனத்தைக் குறித்து இருவரும் சிந்தித்தனர். விட்டேக்கர், கோம்பு முன்னேறி செல்லுமாறு கையசைத்தார், ஆனால் கோம்புவோ புன்முறுவலோடு, “பெரிய ஜிம், முதலாவது நீங்கள்!” என கூறினார். இறுதியில் இருவரும் ஒன்றாக, ஒரே சமயத்தில் உச்சிக்கு செல்ல தீர்மானம் செய்தார்கள்.

பிலிப்பு பட்டணத்தில் உள்ள விசுவாசிகளை நோக்கி, இப்படிப்பட்ட தாழ்மையை வெளிப்படுத்துமாறு பவுல் ஊக்குவித்தான். அவனவன் தனக்கானவைகளை அல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக எனக் கூறினான் (பிலிப்பியர் 2: 4). சுயநலமும், சுயமேன்மையான சிந்தையும் பிரிவினையை கொண்டு வரும். தாழ்மையோ நம்மை இணைக்கும். ஏனெனில் அது “ஏக சிந்தை ஏக அன்பு” (வச. 2) என்ற பண்புடையது.

கருத்து வேறுபாடு அல்லது சண்டைச்சச்சரவு ஏற்படும் போது, அவற்றை வெளியேற்ற உங்களுடைய நியாயத்தை நிலைநிறுத்தும் உரிமையை விட்டுவிடுங்கள். தாழ்மையானது, நம்முடைய பாதையில் செல்வதற்கான தீர்மானத்தை விட்டு, கிருபையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துமாறு கூறுகிறது. “மனத் தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (வச. 3).
தாழ்மையைக் கடைபிடிக்கும் பொழுது, “நமக்காக மரணப்பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைதாமே தாழ்த்தினார்” (வச. 7-8) என்ற இயேசுவைப் போல நாமும் மாறுவோம். இயேசுவின் அடிச்சுவடில் நடப்பது என்பது, நமக்கு சிறந்ததிலிருந்து விலகி, பிறருக்கு சிறந்ததை செய்வது.