1957ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையில் டாக்டர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் பிரசங்கிக்கும் பொழுது, இனவாதத்தில் மூழ்கியிருந்த சமூகத்திற்கு பதிலடி கொடுக்கும்படி தனக்குள் எழும்பிய சோதனைக்கெதிராய் போராடினதை பிரசங்கித்தார்.

அப்பொழுது அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி (Montogomery) என்னும் இடத்தில், டெக்ஸ்டர் சாலை பாப்டிஸ்ட் சபையில் கூடியிருந்தோரைப் பார்த்து “உங்களுடைய சத்துருக்களை எப்படி நேசிக்கிறீர்கள்?” என்று கேட்டு “அதைப் உங்களிலிருந்து தொடங்குங்கள்… எப்படியெனில் உங்கள் எதிரியை தோற்கடிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது, அப்படி செய்யாதிருங்கள்” என்ற பதிலை கூறினார்.

மேலும் அவர் இயேசுவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திராயிருப்பீர்கள்” (மத்தேயு 5: 44-45) என்ற வசனத்தை கூறினார்.

நமக்கு தீங்கு செய்பவர்களை எண்ணும் பொழுது, முந்தி நாமும் தேவனுக்கு சத்துருக்களாய் இருந்தோம் என்பதை நினைவு கூர்ந்தால் நாம் புத்தியுள்ளவர்களாவோம் (ரோமர் 5: 10). “தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மை தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களிடத்தில் ஒப்புக்கொடுத்தார்,” என பவுல் எழுதியுள்ளார் (2 கொரிந்தியர் 5: 18). இப்பொழுது நமக்கு ஒரு பரிசுத்த கடமை உள்ளது. “ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்” (வச. 19). இந்த சத்தியத்தை நாம் உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இனம் சார்ந்த, அரசியல் சார்ந்த பதற்றங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் பிரிவினையை போதிப்பது சபையின் வேலை அல்ல. நம்மை போல் அல்லாதவர்களாயிருந்தாலும் எதிர்மறையான கருத்து உடையவராயினும், அல்லது நமது அழிவை எதிர்நோக்குபவர்களாயினும், எந்த ஒரு தாக்குதலையும் அவர்களுக்கெதிராய் நாம் செய்ய கூடாது. தன்னலமற்ற ஊழியக்காரனின் இருதயத்தையுடைய இயேசுவை பிரதிபலிக்கும் “ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை” நாம் கொண்டுள்ளோம்.