அக்ஸாலாடல் (Axolotl) என்ற மெக்ஸிக்கன் நாட்டு பல்லி ஒரு உயிரியல் புதிர். வளர்ந்து முழுமையான முதிர்ச்சி அடையாமல், முட்டையிலிருந்து வெளிவந்த தவளைக்குஞ்சான தலைப்பிரட்டையைப் போலவே தன் வாழ்நாள் முழுவதும் தோற்றமளிக்கும். வளர்ச்சியைக் கண்டு பயப்படுகிறவர்களை இந்த அக்ஸாலாடலுடன் ஒப்பிடுவது பல எழுத்தாளர்கள் தத்துவர்களின் வழக்கம்.
புதிய விசுவாசிகளுக்கென்று நியமிக்கப்பட்ட ஆவிக்குரிய ஞானப்பாலிலேயே திருப்தி அடைந்து பூரண ஆவிக்குரிய வளர்ச்சியை தவிர்க்கும் கிறிஸ்தவர்களைக் குறித்து எபிரெயர் 5ஆம் அதிகாரத்தில் காணலாம். ஒருவேளை கிறிஸ்து நமக்காகப் பாடுகள் பல அனுபவித்தது போல (வச. 1-10) நாமும் அவருக்குள் பிறருக்காக பாடுகள் பல அனுபவிக்க வேண்டும் என்பதை நினைத்துப் பயந்து விசுவாசத்தில் வளராமல் இருக்கலாம். இதனால் கிறிஸ்துவின் தன்மையை தங்களில் வெளிப்படுத்தின அவர்கள் அவற்றிலிருந்து பின்மாற்றம் அடையும் அபாயமும் உண்டு (6: 9-11). தங்கள் சுயத்தை வெறுக்க பயிற்சியளிக்கும் கற்றுத்தரும் பலமான ஆகாரத்திற்கு தயாராக இல்லை (5:14). ஆகவே இதன் ஆசிரியர், “நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்” என எழுதியுள்ளார் (வச. 11).
தமது சிருஷ்டிகரினால் நியமிக்கபட்ட இயற்கைமுறையைத் தான் அக்ஸாலாடல் பின்பற்றுகின்றன. ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஆவிக்குரிய முதிர்ச்சியடையும்படியாய் வடிவமைக்கப்பட்டுள்ளனர். ஆப்படியாக அவருக்குள் வளரும் பொழுது, நம்முடைய சமாதானத்துக்கும் சந்தோஷத்துக்கும் மேலானதைத் தருகிறது என்பதை அறிந்துக்கொள்வோம்.
நாம் கிறிஸ்துவைப் போல வளர்ந்து தன்னலமற்ற பிறரை ஊக்குவிக்கும் போது நாம் பிதாவை மகிமைப்படுத்துகிறோம்.