இத்தாலி நாட்டின் பிளாரண்ஸ் பேப்டிஸ்டரி (Florence Baptistery) தேவாலயத்தின் கதவுகளில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை மிக நேர்த்தியாய் இத்தாலியக் கலைஞர் லாரண்ஸோ கைபர்டி (Lorenzo Ghiberti, 1378-1455) என்ற சிற்பி பல ஆண்டுகள் செலவழித்து செதுக்கியிருந்தார். அந்த வெண்கலப் படைப்பின் மகத்துவத்தைக் கண்ட மைக்கேல்ஏஞ்சலோ அவற்றை பலலோகத்தின் வாசல்கள் என்று அழைத்தார்.

அக்கதவுகள் வருகிறவர்களை, சுவிசேஷத்தைப் பிரதிபலித்து வரவேற்கும் ஓர் உன்னதக் கலைப் புதையலாகத் திகழ்கிறது. இயேசு கிறிஸ்து, “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்” (யோவான் 10: 9) என்று கூறியுள்ளார். தம்முடைய சிலுவை மரணத்திற்கு முந்தைய இரவு, இயேசு சீஷர்களை நோக்கி, “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (14: 6) என்று கூறினார். அதிலிருந்து சில நாழிகையில், தம் அருகில் சிலுவையில் தொங்கிய ஒரு கள்ளனிடம், “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்கிறேன்” என்று கூறுவார் (லூக்கா 23: 43).

சில வாரங்களுக்குப் பிறகு சிலுவை மரணத்திற்கு இயேசுவை ஒப்புக்கொடுத்தவர்களிடம், “அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை” (அப்போ 4: 12) என பேதுரு தைரியமாக பறைசாற்றினான். பல வருடங்கள் கழித்து அப்போஸ்தலனாகிய பவுல், “தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே, அது மனிதனாய் அவதரித்த இயேசு கிறிஸ்துவே” (1 தீமோ 2: 5) என எழுதினார். தம் மேல் விசுவாசம் வைத்து வரும் அனைவருக்கும் நித்திய ஜீவனை அளிக்கும் இரட்சகரிடத்தில் தான் பரலோகத்தின் வாசல்கள் உள்ளது. அவருடைய இரட்சிப்பின் மகிழ்ச்சிக்குள் பிரவேசியுங்கள்.