“சில சமயம், தேவன் என் கூப்பிடுதலை கேட்கவில்லை என்றே தோன்றுகிறது.” தேவனோடு நடப்பதில் நிலைத்து நிற்க பிரயாசப்படும், குடிகார கணவனை உடைய ஒரு பெண்மணியின் வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் அநேக விசுவாசிகளின் இதயக்குமுறல்களைப் பிரதிபலிக்கிறது. அவள் தன் கணவன் திருந்தும்படி பல ஆண்டுகளாக தேவனிடம் மன்றாடினாள். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை அவன் திருந்தவேயில்லை.
நன்மையான ஒன்றை, தேவனை மகிமைப் படுத்தக்கூடிய ஒன்றை, இடைவிடாமல் தேவனிடம் மன்றாடியும், கேட்டும், பதில் வரவில்லை என்றால் நாம் என்ன நினைப்பது? தேவன் கேட்கின்றாரா? இல்லையா?
நாம், நமது இரட்சகரின் வாழ்வை நோக்குவோம். கெத்சமனே தோட்டத்தில், அநேக நேரம் அவர் ஜெபத்தில் பிதாவினிடத்தில் அங்கலாய்த்தார். “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்” (மத் 26: 39) என்று தனது இருதயத்தை ஊற்றி மன்றாடினார். ஆனால் பிதாவினுடைய பதில் எதிர்மறையாகவே இருந்தது. இரட்சிப்பு உண்டாக, இயேசுவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுப்பது பிதாவுக்கு அவசியமாயிற்று. பிதா தன்னைக் கைவிட்டது போல இயேசு உணர்ந்தாலும், தேவன் தம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்று விசுவாசித்ததால், உருக்கமாயும், உறுதியாயும் ஜெபம் செய்தார்.
நாம் ஜெபம் செய்யும் பொழுது, தேவன் எப்படிக் கிரியை செய்வார் அல்லது எப்படி நன்மையான முடிவைக் கொண்டு வருவார் என்பது காணக்கூடாததாய் இருக்கலாம். ஆகவே தான் நாம் அவரை விசுவாசிப்பது அவசியமாயிருக்கிறது. நாம் நம்முடைய உரிமைகளை விட்டுவிட்டு, தேவன் செய்வதைச் செய்ய ஒப்புக் கொடுக்க வேண்டும்.
நாம் அறியக்கூடாதவைகளை எல்லாம் சகலத்தையும் அறிந்தவராகிய தேவனிடம் விட்டுவிட வேண்டும். அவர் நம்முடைய கூப்பிடுதலைக் கேட்டு அவருடைய சித்தத்தின்படி எல்லாவற்றையும் நேர்த்தியாய் நடப்பிக்கிறார்.