நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் திரும்ப நாம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை என்னவெனில், நம்மிடம் என்ன உள்ளது என்பதை மறந்து, அந்த கணத்தில் நம்மிடம் என்ன இல்லை என்பதையே நாம் நோக்கி கொண்டிருக்கிறோம். எங்கள் சபையில், “என் ஆத்துமாவே…” என்று சங்கீதம் 103ல் இருந்து பாடகர் குழுவினர் பாடிய பொழுது இதை நினைவு கூர்ந்தேன். தேவன் நம்மை மன்னிக்கிறவர், சுகப்படுத்துகிறவர், மீட்கின்றவர், தேவைகளைச் சந்திப்பவர், திருப்தி அளிப்பவர், புதுப்பிப்பவர் (வசனங்கள் 4-5), இதை எப்படி நாம் மறக்கக் கூடும்? ஆயினும் நம் அன்றாட வாழ்வின் முக்கிய தேவைகள், தொடர் தோல்விகள், கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் போது மறந்துவிடுகிறோம்.
சங்கீதக்காரன், “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது” (வச 8,10-11) என்பதை நினைவு கூரும்படி நம்மை அழைக்கிறான்.
நம்முடைய விசுவாசப் பாதையில், நம்முடைய சிறுமையில் தேவனைச் சார்ந்து கொண்டு, அவருடைய கிருபையையும் எல்லையற்ற அன்பையும் பெற்றுக் கொண்ட நாம் நம்மை குறித்து மேன்மை பாராட்ட ஒன்றும் இல்லை என உணர்கிறோம். ஏனெனில் அவை அவருடைய உபகாரங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது.
“என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி (வச 1)