கவலையின்றி இருத்தல்
அன்றாட நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளைக் குறித்து நாம் அறிந்திருக்க விரும்புவது, பாதகமான விளைவுகளை உண்டு பண்ணுகிறது. ஏனெனில் நல்ல செய்திகளை விட கெட்ட செய்திகளே அதிகமாகப் பாதிக்கிறது. நம்மால் கட்டுப்படுத்த இயலாத தனி மனிதர்கள், கூட்டங்கள் அல்லது அரசாங்கம் இவைகளின் தீய செயல்பாடுகள் பற்றி மிக எளிதாக அதிகமாக கவலைப்படுகிறோம்.
சங்கீதம் 37 அனுதின செய்திகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது. அச்சங்கீதத்தை ஆரம்பிக்கும் பொழுது தாவீது “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே” (வச.1) என்று ஆரம்பிக்கிறான். பின்பு நாம் மிகவும் அதிகமாக கவலை கொள்ளாமல்…
சந்தோஷப்பட வேண்டாத நேரம் எது?
கானாவிலுள்ள அக்கான் இன மக்கள் மத்தியில்,“பல்லியானது அதின் மேல் கல்லெறியும் பையன்கள் மேல் அதிகம் கோபப்படாமல் கல்லெறிவதால் அது மரிக்கப்போவதை நின்று பார்த்து சந்தோஷப்படும் பையன்கள் மேலேயே கோபமடைகிறது” என்ற ஒரு பழமொழி உண்டு. ஒருவரது வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ச்சி அடைவது, அவரது வீழ்ச்சியின் காரணமாவது போலவும், மேலும் அதிக தீமையான காரியங்கள் அவருக்கு வரவேண்டுமென்று விரும்புவதைப் போலவும் உள்ளது.
இதே தன்மையுடன்தான் “என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குறைச்சலாக்கப்படுகிற போதும், இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிற போதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிற போதும்” (எசேக்கியேல்…
கண்ணாடி கடற்கரை
கலிபோர்னியாவில் போர்ட்பிராஹ் என்ற இடத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்து வந்தவர்கள், அவர்களது குப்பைக் கூழங்களை, ஒரு செங்குத்தான பாறைக்கு அந்தப்பக்கம் இருந்த கடற்கரையில் விட்டெறிந்து வந்தார்கள். டப்பாக்கள் பாட்டில்கள் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்கள் என மலைபோல குப்பை, அக்கடற்கரையில் சேர்க்கப்பட்டு அருவருப்பான காட்சியாகக் காணப்பட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் அவ்வாறு குப்பையை கடற்கரையில் தூக்கி எறிவதை நிறுத்தினபொழுதும் கூட, அந்தக் குப்பபைக் குவியல் பார்ப்பதற்கே அருவருப்பான உணர்ச்சியை கொடுக்கக் கூடியதும், எந்த வழியிலும் மறுபடியும் சரி செய்ய முடியாது போன்றும் காணப்பட்டது.…
ஒரு பெயரின் அர்த்தம்
நியுயோர்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையின்படி ஆப்பிரிக்காவிலுள்ள அநேக ஊர்களில் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்களால் விஷேசமானது என்று கருதப்பட்ட, வருகைதந்த புகழ்பெற்றவரின் பெயர், சிறப்பான நிகழ்ச்சி அல்லது சூழ்நிலைகள், இவற்றை குறித்த பெயர்களே சூட்டப்பட்டன. உதாரணமாக ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்ட பொழுது மருத்துவர் அந்த குழந்தையின் பெற்றோரிடம் அக்குழந்தையின் சுகவீனத்தை அவர்களால் சுகப்படுத்த இயலாது என்றும் அக்குழந்தை பிழைக்குமா பிழைக்காதா என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று மருத்துவர் கூறின பொழுது, அந்த பெற்றோர் அந்த குழந்தைக்கு “கடவுளுக்குத்தான் தெரியும்” (God knows)…