இருளில் தேடுதல்
வெஸ்ட் ஹைலேண்ட் வகையைச் சேர்ந்த எங்களது வயது சென்ற வெண்மை நிற நாய் எங்களது காலருகே படுக்கையில் சுருண்டு படுத்திருக்கும். கடந்த 13 ஆண்டுகளாக அதுதான் அதனுடைய இடம். பொதுவாக அது அமைதியாக அங்கும், இங்கும் அசையாமல் படுத்திருக்கும். ஆனால் சமீபகாலமாக நடு இரவில் அதன் கால்களால் மெதுவாக எங்களைத் தட்டிப்பார்க்கும். அது வெளியே போவதற்குத்தான் அப்படி செய்கிறதென்று முதலில் எண்ணி அதை வெளியே விட்டோம். பின்பு நாங்கள் எங்களது படுக்கையில் இருக்கிறோமா இல்லையா என்று பார்ப்பதற்குத்தான் அப்படிச் செய்கிறது என்று அறிந்து கொண்டோம்.…
கிறிஸ்மஸ் ஓய்வு
நான் சிறுவனாக இருந்தபொழுது பணம் சம்பாதிப்பதற்காக வீடுகளில் செய்தித்தாள் போட்டேன். அது காலை வெளியீடாக இருந்தபடியினாலும், நான் போட வேண்டிய 140 செய்தித்தாள்களையும் அந்தந்த வீடுகளிலே காலை 6 மணிக்கு சேர்க்க வேண்டியதிருந்தாலும், வாரம் 7 நாட்களிலும் நான் அதிகாலை 3 மணிக்கு எழும்ப வேண்டியதிருந்தது.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் ஒருநாள் வேறுபட்டதாக இருந்தது. கிறிஸ்மஸ் நாளுக்குரிய காலை செய்தித்தாளை, கிறிஸ்மஸ்க்கு முந்தின நாள் மாலையே போட்டு விடுவோம். ஆகவே கிறிஸ்மஸ் அன்று மட்டும்தான் நான் மற்றவர்களைப் போல காலையில் நன்றாக உறங்கி…
உமது நாமம் பரிசுத்தம்
ஒரு நாள் மத்தியான வேளையில் நானும், எனது ஆவிக்கேற்ற வழிகாட்டியாக இருந்த எனது சிநேகிதனும், தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவது பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக” (யாத் 20.7) என்று மூன்றாவது கட்டளை கூறுகிறது. சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தேவனுடைய நாமத்தை மரியாதையில்லாமல் சாதாரணமாகப் பயன்படுத்துவதும்தான் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவது என்று நினைக்கிறோம். ஆனால் எனது ஆவிக்குரிய வழிகாட்டியான எனது நண்பன், உண்மையான விசுவாசம் என்றால் என்ன என்பதை விளக்கக்கூடிய சந்தர்ப்பத்தை தவறவிடாமல் மேலே கூறப்பட்ட…
எப்படி என்பதின் முக்கியத்துவம்
நானும் என் சிநேகிதன் சார்லியும் வேதாகமக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் பொழுதே, பகுதி நேர வேலையாக மரச்சாமான்கள் செய்யும் கடையில் வேலை பார்த்தோம். மரச் சாமான்கள் வாங்கினவர்களின் வீட்டிற்கு அச்சாமான்களை வண்டியில் ஏற்றி ஒப்படைக்கச் செல்லும் பொழுது, எங்களுடன் கூட வீட்டின் உள்பக்கத்தை அலங்கரிப்புச் செய்யக் கூடியவரும் வருவார். அவர் அந்த வீட்டு ஆட்களுடன் அலங்கரிப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, நாங்கள் வண்டியிலிருந்து சாமான்களை இறக்கி வீட்டிற்குள் கொண்டு செல்லுவோம். சில நேரங்களில் அடுக்கு மாடி வீடுகளுக்கு சாமான்களை எடுத்துச் செல்ல பல…
கொண்டாடுவோம் வாருங்கள்
2014 உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் கானாவைச் சேர்ந்த அசாமோஜியன் ஜெர்மெனிக்கு எதிராக ஒரு கோல் போட்ட பொழுது அவனும் அவனது குழுவினரும், சீரான அடிகள் எடுத்து வைத்து அழகான ஒரு நடனம் ஆடினர். ஒரு சில நிமிடங்கள் கழித்து ஜெர்மெனியைச் சேர்ந்த மிரோஸ்லாவ் குலோஸ் ஒரு கோல் போட்ட பொழுது, அவன் மகிழ்ச்சியில் குட்டிக்கரணம் அடித்தான். “கால் பந்து விளையாட்டில் வீரர்கள் வெற்றியைக் கொண்டாடும் விதம் மிகவும் கவர்ச்சியாக உள்ளது. ஏனெனில் அது விளையாட்டு வீரர்களின் குணாதிசயங்களையும், மதீப்பீடுகளையும், ஆவல்களையும் வெளிப்படுத்தக் கூடிய…