2010, அக்டோபர் மாதத்தில் சிலி நாட்டைச் சேர்ந்த 33 சுரங்கத் தொழிலாளிகள் சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு வெடி விபத்தினால் சுரங்கத்திற்குள் மாட்டிக் கொண்டார்கள். அவர்களை மீட்பதில், பூமிக்கடியிலுள்ள சுரங்கங்களின் வரைபடத்தை தெளிவாக கண்டு அறியக்கூடிய திறமையுடைய மக்கரீனா வால்டெஸ்ஸின் பங்கு மிக முக்கியமானது. பூமிக்கடியில் மாட்டிக்கொண்ட சுரங்கத் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவ்விடத்தில் துளையிடுவது என்பது “700 மீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு ஈயைச் சுட முயற்சிப்பது போன்ற செயலாகும்” என்று மக்கரீனா கூறினாள். சுரங்கத்தைப் பற்றிய அவளது சிறந்த அனுபவத்தினால்,பூமியின் ஆழத்தில் சுரங்கத் தொழிலாளிகள் புதையுண்டிருந்த இடத்தை சரியாகக் கண்டுபிடித்து, அந்த இடத்தில் தேடவழி நடத்தினதால், ஆச்சரியப்படக் கூடிய அந்த மீட்புப்பணி நடந்தது.
ஆன்மீகக் பிரகாரமாக பாவத்தில் மூழ்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் எளிதாக மனம் சோர்வடைந்து விடுவோம். இதைவிட மிக மோசமானத் தடைகளைச் சந்தித்த பவுல் அப்போஸ்தலன் “நாங்கள் சோர்ந்து போகிறதில்லை” (2கொரி4:1) என்று கூறினார். “மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாய் இராதபடிக்கு இப்பிரபஞ்சத்தின் தேவனானவன், அவர்களுடைய மனதைக் குருடாக்கினாலும்” (2கொரி 4: 4-5) இரட்சிப்பின் நற்செய்தியை பவுல் தொடர்ந்து பறை சாற்றினார். அவர் அந்தகாரத்தில் இருந்த பொழுது (வச.6) அவரது வாழ்க்கையில் வெளிச்சத்தை அன்புடன் பிரகாசிக்கச் செய்த தேவனால் ஏவப்பட்டு அவனுக்குச் செய்தது போல பிறருடைய வாழ்க்கையிலும் செய்ய தேவனால் முடியுமென்று நிச்சயமாக அறிந்திருந்தான்.
நீங்களும் நானும் அதைப் போன்ற ஒரு அனுபவத்தைக் கூற முடியும். நம்மை இணங்க வைக்கும் தேவனுடைய ஆற்றல் மிகுந்த அன்பினால், நாமும் கூட தளர்ந்து போகத் தேவை இல்லை. அந்தச் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுவை வழிநடத்தின மக்கரீனாவைப் போல, தேவனுடைய ஆவியானவர், நம்முடைய அன்பான வார்த்தைகளின் ஒளியை தாங்கள் மீட்கப்பட வேண்டும் என்று அறியாதவர்களின் உள்ளத்திற்குள் கொண்டு செல்வார்.