எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த பொழுது, ஒருநாள் இரவு உணவின் போது, பட்டாணி இருந்த தட்டை ஒருவருக்கொருவர் கடத்தினோம். அப்பொழுது எனது பிள்ளைகளில் ஒருவன் பிடிவாதமாக “வேண்டாம்” என்று கூறினான். “என்ன வேண்டாம்” என்று நாங்கள் பதிலுக்குக் கேட்டோம். “வேண்டாம் நன்றி” என்று கூறுவான் என்று எதிர்பார்த்தோம் அதற்குப் பதிலாக “பட்டாணி வேண்டாம்” என்று அவன் பதில் கூறினான். அவன் கூறின அந்தக்காரியம், நாம் கைக்கொள்ள வேண்டிய நன்நடத்தையுள்ள செயல்களின் முக்கியத்துவம் பற்றி எங்களுக்குள்ளாக பேசிக் கொள்வதற்கு வழிநடத்தியது. உண்மையில் இதுபோல பலமுறை எங்களுக்குள்ளாக அது பற்றி விவாதித்துள்ளோம்.
வெளிப்படையான நன் நடத்தையுள்ள செயல்களுக்கு மேலாக நன்றியுள்ள இருதயம் உடையவர்களாக நாம் இருக்க வேண்டுமென்று நமது கர்த்தர் நமக்கு நினைப்பூட்டுகிறார். நாம் நமது நன்றியை வெளிப்படையாக தெரிவிப்பதே, தேவனோடு நமக்குள்ள உறவின் முக்கியத்துவமாகும் என்று வேதாகமம் பலமுறை நமக்கு நினைப்பூட்டுகிறது. “கர்த்தரைத் துதியுங்கள்” என்ற துதி வார்த்தைகளுடன் சங்கீதம் 118 துவங்கி முடிவடைகிறது. (வச 1, 29) அவருடைய பிரசன்னத்தில் நாம் வரும்பொழுது அவருக்கு நாம் நன்றி கூறவேண்டும் (100:4) அவரிடம் நாம் கேட்கும் விண்ணப்பங்கள், நன்றியுள்ள ஆவியினால் நிறைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நன்றியுள்ள தன்மை, தேவன் நமக்கு அருளின அளவற்ற ஆசீர்வாதங்களை நினைவு கூரவைக்கும். துன்பங்கள், நம்பிக்கை அற்ற நேரங்கள் மத்தியில், தேவனுடைய பிரசன்னமும், அன்பும் நம்முடன் எப்பொழுதும் இருக்கும் தோழர்களாக உள்ளன.
ஆகவே “கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது” (118:1) என்று சங்கீதக்காரன் நமக்கு நினைப்பூட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.