எனது ஊரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த வானவேடிக்கையை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, என் கவனம் சிதறடிக்கப்பட்டது. மிக முக்கியமான வானவேடிக்கையின் மத்தியில் அதன் வலப் பக்கத்தில், இடப் பக்கத்தில் சிறிய வானவேடிக்கைகளும் வானில் காணப்பட்டன. பார்ப்பதற்கு அவை நன்றாகத்தான் இருந்தன. ஆனால் அவற்றைப் பார்ப்பதினால் என் தலைக்குமேலே கண்கவர் காட்சிகளுடன் நடந்த முக்கியமான வானவேடிக்கைகளில் சிலவற்றைப் பார்க்க முடியாமல் போனது.

சில சமயங்களில் நல்ல காரியங்கள் மிகச் சிறந்த காரியங்களைவிட்டு நமது கவனத்தை சிதறடிக்கும். அதைப் போலவே லூக்கா 10: 38-42ல் கூறப்பட்டுள்ள மார்த்தாளின் வாழ்க்கையிலும் நடந்தது. பெத்தானியா என்ற கிராமத்திற்கு வந்த இயேசுவையும், அவருடைய சீஷர்களையும், மார்த்தாள் அவளுடைய வீட்டிற்கு அழைத்தாள் சிறந்த விருந்து அளிக்க வேண்டுமென்றால், விருந்தாளிகளுக்கு நல்ல உணவு தயாரிக்க வேண்டும். ஆகவே அவளைக் குறை கூற நாம் விரும்பவில்லை.

அவளுடைய சகோதரி மரியாள் அவளுடைய வேலைகளில் உதவி செய்யவில்லை என்று மார்தாள் இயேசுவிடம் குறை கூறினபொழுது, மரியாள் அவருடைய பாதத்தில் அமர்ந்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தது சரி என்று இயேசு கூறினார். ஆனால் மார்த்தாளை விட மரியாள் ஆவிக்கேற்ற வாழ்க்கையில் மிகவும் வளர்ச்சியடைந்தவள் என்று இயேசு கூறவில்லை. சில சமயங்களில் மார்த்தாள் மரியாளைவிட இயேசுவிடம் அதிக விசுவாசமுள்ளவளாக இருந்தாள். (யோவான் 11: 19-20) இயேசுவின் சரீரப்பிரகாரமான தேவைகளைச் சந்திக்க விரும்பின மார்த்தாளை இயேசு குறை கூறவில்லை ஆயினும் நமது வேலைகளின் மத்தியில் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுப்பதே மிகவும் முக்கியமானதென்று மார்த்தாள் புரிந்து கொள்ள வேண்டுமென்று கர்த்தர் விரும்பினார்.