ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளில் முதலாம் உலகப் போரில் இணைந்து போராடிய, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாட்டின் தரைப்படை வீரர்களை கனப்படுத்தும் வகையில் 2015 ஏப்ரல் 25ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு100வது ஆண்டின் நினைவு விழா ஆரம்பமாகும். அந்த இரு நாடுகளும் தனிப்பட்டு போரை சந்திக்க வேண்டிய நிலைமையை இவ்விரு நாட்டின் வீரர்கள் இணைந்து செயல்பட்டதினால் தவிர்க்கப்பட்டதை அந்த நாள் நினைப்பூட்டுகிறது. இரு நாட்டின் வீரர்களும் போரினால் வரும் ஆபத்துக்களை இணைந்தே சந்தித்தனர்.
வாழ்க்கையின் துன்பங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை பின்பற்றவே, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் அழைக்கப்பட்டுள்ளர்கள். “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.” (கலாத்தியர் 6:2) என்று பவுல் நமக்கு அறைகூவல் விடுகிறார் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களின் மத்தியில் நாம் இணைந்து செயல்பட்டால், கடினமான சூழ்நிலைகளில் ஒருவரையொருவர் தாங்கி பலப்படுத்திக் கொள்ளலாம். கிறிஸ்துவின் அன்பையும், இரக்கத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பொழுது, வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் நம்மைத் தனிமைப் படுத்தாதபடி, கிறிஸ்துவண்டையும், மற்ற விசுவாசிகளண்டையும் நம்மை ஈர்க்க வேண்டும்.
நமது கஷ்டங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பொழுது, கிறிஸ்துவின் அன்பை செயல்படுத்துகிறவர்களாக இருக்கிறோம். “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்.” (ஏசாயா 53:4) என்று ஏசாயாவில் வாசிக்கிறோம். நமக்கு வரும் போரட்டங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில் நாம் அவற்றை தனிமையாக சந்திக்கப்போவதில்லை. நமது இக்கட்டுகளில் உதவ நமது தேவன் நம்மோடிருக்கிறார்.