தீமை ஏற்பட இருக்கிறது என்பதற்கான முன் அறிகுறி ஏதும் இல்லாமல் அந்த சத்தம் தொடர்ச்சியான மெல்லிய ஒலியாகக் கேட்டது. பின்பு ஆபத்து வருவதற்கு அறிகுறியாக பூமியே அதிரத்தக்கதாக தட, தட வென்ற இரைச்சலாக மாறியது. விரைவில் நூற்றுக்கணக்கான இராணுவ கனரக வண்டிகளும், ஆயிரக்கணக்கான காலாட் படை வீரர்களும், மிகக்குறைந்த எண்ணிக்கை உடைய பின்லாந்து வீரர்கள் முன் திரள் கூட்டமாக கூடி வந்தார்கள். அவர்களது கொலை வெறியைக் கருத்தில் கொண்ட, ஒரு பெயர் அறிவிக்கப்படாத பின்லாந்து வீரர் கருத்தாழமிக்க சில அறிவுரைகளைக் கூறினான். எதிராளிகளின் எண்ணிக்கையைக் குறித்து ஆச்சரியப்பட்டு தைரியமாக “இத்தனை எதிராளிகளைப் புதைப்பதற்கு நமக்கு எங்கே இடமுள்ளது” என்று சத்தமாகக் கூறினான்.

2ம் உலகப்போரில் அந்தப் பின்லாந்து வீரர்கள் காண்பித்த மன உறுதி, தைரியத்தைப் போல, 2600 ஆண்டுகளுக்கு முன்பு யூதேயா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் அவர்களது இக்கட்டான சமயத்தில் சற்று மாறுபட்டு செயல்பட்டான். அசீரியப்படைகள் எருசலேமை முற்றுகை இட்டது. அதன் ஜனங்களை நகரத்தின் மதிற் சுவர்களுக்குள்ளாக சிறைப்படுத்தியது. முற்றுகை இடப்பட்ட மக்கள் உண்ண உணவில்லாமல் நம்பிக்கையற்ற நிலையில் நகரம் அசீரியர்களின் கையில் விழுந்து விடுமோ என்ற நிலைக்கு வந்தார்கள். எருசலேமின் அரசன் எசேக்கியா திகில் அடைந்தான். “சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம் பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்” (ஏசாயா 37:16) என்று எசேக்கியா ஜெபம் பண்ணினான்.

ஏசாயா தீர்க்கத்தரிசியின் மூலம், அசீரிய மன்னர் சனகெரிப்புடன் தேவன் கீழ்கண்ட எச்சரிப்பின் வார்த்தைகள் மூலம் பதிலுரைத்தார். “யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்” (வச. 23) பின்பு தேவன் “என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிப்பேன்” (வச. 35) என்று எருசலேமை ஆறுதல் படுத்தினார். தேவன் சனகெரிப்பை தோல்வி அடையச் செய்து அசீரியப்படையை அழித்துவிட்டார் (வச. 36-38)

உங்களது வாழ்க்கை எல்லை எங்கிலும் இன்று எந்தவிதமான ஆபத்துக்கள் காணப்பட்டாலும் எசேக்கியா, ஏசாயாவின் தேவன் இன்னமும் ஆளுகை செய்கிறார். நாம் ஒவ்வொருவரும் அவரை நோக்கிக் கூப்பிட வேண்டுமென்று விரும்புகிறார். அவரது வல்லமையை நமக்கு காண்பிக்க விரும்புகிறார்.