Archives: அக்டோபர் 2015

நீங்கள் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டீர்கள்

இன்றையதினம் மிகவும் துக்ககரமான வார்த்தைகளைக் கேட்டேன். இரண்டு விசுவாசிகள் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுடைய ஒரு காரியத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரில் மூத்தவர் தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் உடையவராக, வேதவசனங்களை ஆயுதம் போல அதிகாரத்தோடு பயன்படுத்தி அடுத்த நபரின் வாழ்க்கையில், காணப்பட்ட தவறுகளைக் குத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார். வயதில் இளயவர் மூத்தவராலும், அவரது குறைகூறுதலினாலும் சோர்வடைந்து ஆர்வத்தை இழந்து விட்டார்.
அவர்களுடைய அந்த உரையாடல் முடிவுக்கு வந்த பொழுது, மூத்த மனிதன் இளய மனிதனின் ஆர்வமற்ற தன்மையைக் குறித்து விமர்சித்தான்.…

எனது இருதயத்தில் மறைந்துள்ளது.

டீஜிட்டல் முறையில் (Digital) கணினியில் வெளியிடப்படும் இதழ்களை வாசிப்பதில் பழக்கப்பட்டுவிட்டேன். இதன் மூலம் மரங்களைக் காப்பாற்றுகிறேன் என மன மகிழ்ச்சி அடைகிறேன். அத்தோடு கூட தபாலில் மாத இதழ் வருவதற்காக நான் காத்திருக்கத் தேவை இல்லை. ஆனால் அச்சிடப்பட்ட காகிதத்தை வாசிக்காததால் அதிகம் மனம் வருந்துகிறேன். ஏனெனில் பளபளப்பான அந்த காகிதத்தின் பக்கங்களை என் விரல்களால் தடவிப் பார்ப்பது எனக்கு இனிமையான அனுபவமாகும். அதில் வெளியாகும் முக்கிய சமையல் குறிப்புகளை வெட்டி எடுக்கும் சந்தர்ப்பத்தையும் இழந்ததால் மனம் வருத்தமடைகிறேன்.
கணினியின் மூலம் வாசிக்கக்கூடிய டிஜிட்டல்…

திரைக்குப் பின்னால்

எங்களது திருச்சபையின் வெளி ஊழியத்தின் நிறைவு நிகழ்ச்சி, நகரில் ஒரு ஆராதனையோடு முடிவடைந்தது. அந்த ஊழியத்திற்காக திட்டமிட்டு செயல்பட்ட குழுவிலிருந்த எங்கள் திருச்சபையின் வாலிப ஐக்கியத்தின் இசைக் குழுவினர், ஆலோசகர்கள், திருச்சபையின் தலைவர்கள் ஆகியோர் அந்த இறுதி நாளில் மேடைக்கு வந்தார்கள். உடனே நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியினால் கைகளைத் தட்டி அவர்களது கடினமான ஊழியத்திற்காக அவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தினோம்.
அந்தக் குழுவில் ஒரு மனிதர், ஒருவராலும் காணப்படாமலே இருந்தார். ஆனால் அவர்தான் அக்குழுவின் தலைவர், ஒரு சில நாட்களுக்குப் பின் அவரை நான் பார்த்த…

கண்களுக்கு மறைந்து போதல்

நான் வசிக்கும் பகுதியில் தாவரங்களில் சில பகுதிகள் பூமிக்கு அடியிலேயே சில காலம் இருந்து விட்டு, மறுபடியும் முளைத்து வெளியே வரக்கூடிய காலமாகும். பூமியியே பனி விழுந்து தரை உறைந்து போகும் முன்பு தாவரங்கள் அழகாக பூத்துக் குலுங்குகின்றன. பனிக்காலம் முடிந்து மறுபடியும் வசந்தகாலம் வரும் வரை பூமிக்கடியில் மறைந்திருக்கின்றன. பனியிலே இறுகிப்போன மண் இளக்கமானவுடன், இவை மறுபடியும் தங்கள் தலைகளை வானத்திற்கு நேராய் உயர்த்துகின்றன. உயர்த்தி பற்பல வண்ணப் பூக்களால் தங்கள் சிருஷ்டிகரை ஆராதிக்கின்றன.
நமது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் செயலற்று அமைதியாக…

இதற்காகவே நான் இயேசுவை உடையவனாக இருக்கிறேன்

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாத காலங்களே கிடையாது. ஆனால் சில சமயங்களில் அதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும்.
1994ல் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையின் போது ரோஸ் என்ற பெண்ணையும் அவளது இரு சிறு மகள்களையும் தவிர, அனைத்து குடும்ப அங்கத்தினர்களும் கொலை செய்யப்படுவதைப்பார்த்தாள். இப்பொழுது அங்கு இருக்கும் பல விதவைகள் மத்தியில் இவளும் ஒரு விதவையாகக் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறாள். ஆனால் தோற்கடிக்கப்படுவதற்கு அவள் இடம் கொடுக்கவில்லை. மேலும் இரு அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்தாள். 5 பேருள்ள அவளது குடும்பத்தினரைப்…