இடாகோவிலுள்ள ஜக்ஹேன்டில் என்ற மலையின் வட பகுதியின் உச்சியிலிருந்த ஓர் ஏரியைப் பற்றி மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த எனது சிநேகிதன் என்னிடம் கூறினான். கட்துரோட் வகையைச் சார்ந்த பெரிய டிரவுட் மீன்கள் மிக அதிகமாகக் அங்கு காணப்படுகின்றன என்ற வதந்தி உள்ளது. என்னுடைய சிநேகிதன் ஒரு பென்சிலையும் பேப்பரையும் எடுத்து அந்த ஏரிக்குச் செல்ல வேண்டிய வழியை வரைபடமாக அதில் வரைந்து காண்பித்தான். அநேக வாரங்கள் கழித்து எனது டிரக் வண்டியில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு எனது சிநேகிதன் கூறியிருந்த திசையை பின் பற்றிச் சென்றேன்.
இதுவரை எனது வாகனத்தை ஓட்டியே இராத மிகவும் மோசமான சாலையில் அவனது வரைபடம் என்னைக் கொண்டுபோய்விட்டது. காட்டில் புல்டோசரால் போடப்பட்ட அதிகாரப்பூர்வமான பழமையான சாலை அது. ஆனால் அதற்குப் பின்பு அந்த சாலை ஒரு பொழுதும் புதுப்பிக்கப்படவே இல்லை. நீரினால் இழுத்துவரப்பட்ட, கீழே விழுந்த மரக்கட்டைகள் மேலும் ஆழமான வாகனத்தடங்கள், பெரிய பாறைகள் ஆகிய இவைகள் எனது முதுகெலும்பை பாதித்ததுடன் எனது டிரக்கின் அடிப்பகுதியையும் வளைத்து விட்டது. நான் சேர நினைத்திருந்த இடத்தை அடைய காலைப் பொழுதின் பாதி செலவாகிவிட்டது. இறுதியில் நான் அந்த இடத்தை அடைந்த பொழுது
“இப்படிப்பட்ட சாலையில் ஏன் என்னை எனது சிநேகிதன் அனுப்பினான்”. என்று எனக்குள் தானே கேட்டுக் கொண்டேன்.
ஆனால அந்த ஏரி பிரமிக்கச் செய்யும் அழகுடையதாக இருந்தது. அதிலிருந்த மீன்கள் உண்மையிலேயே மிகப் பெரியனவாகவும், அங்கும் இங்கும் கூட்டம் கூட்டமாக இருந்தன. எனது சிநேகிதன் என்னை சரியான சாலையில் தான் போகும் படி கூறி இருந்தான். சாலையில் முடிவில் என்ன இருக்கும் என்று நான் அறிந்திருந்தால் நானே அந்த சாலையை பொறுமையோடு பயணம் செய்வதற்கு தெரிந்தெடுத்திருப்பேன்.
“கர்த்தருடைய உடன்படிக்கை சத்தியமுமானவைகள் (சங்கீதம் 25:10) என்ற வார்த்தைகள் மிக உண்மையானவைகள். தேவனால் நமக்கென்று குறிக்கப்பட்ட சில வழிகள் கரடுமுரடாக சலிப்பூட்டுபவைகளாக இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் தேவனுடைய அன்பினாலும் அவருடைய உண்மைத்தன்மைகளாலும் நிறைந்திருக்கின்றன. நமது பயணத்தின் முடிவிற்கு நாம் வரும் பொழுது நாம் அறிந்து கொள்ள வேண்டியதை அறிந்தவுடன் “தேவனுடைய வழிகள் எனக்கும் சிறந்தவைகள்” என்று நாம் கூறுவோம்.