அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் அறையில் நான் அமர்ந்திருந்தபொழுது, சிந்திப்பதற்கு எனக்கு நேரம் கிடைத்தது. மிக இளம் வயதுடைய எனது ஒரே சகோதரனுக்கு “மூளைச்சாவு” ஏற்பட்டுவிட்டது என்ற துக்ககரமான செய்தியை நான் கேள்விப்பட்டு ஒருசில நாட்களுக்கு முன் இதைப்போலவே காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.

அதுபோல இந்த நாளில் மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை உட்பட்டிருந்த, எனது மனைவியைப் பற்றிய செய்திக்காக அதே காத்திருப்பு அறையில் காத்துக் கொண்டிருந்தபொழுது, எனது மனைவிக்கு நீண்ட பெரிய கடிதம் ஒன்று எழுதினேன். மனக்கலக்கத்துடன் கூடிய உரையாடல்கள் ஏதுமறியாத பிள்ளைகள் இவர்களால் சூழப்பட்டிருந்த நான், தேவனுடைய அமைதியான சத்தத்தைக் கேட்க முற்பட்டேன்.

திடீரென ஒரு செய்தி! அறுவை சிகிச்சை நிபுணர் என்னைப் பார்க்க விரும்பினார். ஒரு தனிப்பட்ட அறைக்குச் சென்று அங்கு அவருக்கு காத்திருந்தேன். அங்கே மேஜையின்மேல் மெல்லிழைத்தாள்களையுடைய இரு பெட்டிகள் இருந்தன. அவை மூக்கை சுத்தம் பண்ணுவதற்கல்ல, எனது சகோதரனுக்கு “மூளைச்சாவு” ஏற்பட்டு மருத்துவர்கள் “எங்களால் ஒன்றும் செய்ய இயலாது” அவன் மரித்துவிட்டான் என்ற மிகவும் கடினமான வார்த்தைகளை கேட்கும்பொழுது கண்ணீரைத் துடைக்கப் பயன்படுத்துவதற்கு உரியவைகள் ஆகும்.

நிச்சயமான துக்ககரமான நேரங்களில் உண்மையாகக் வெளிப்படையாகக் கூறும் சங்கீதங்கள் நாம் வந்தடையத்தக்கதான இடங்களாகவுள்ளன. சங்கீதம் 31 மிகவும் துன்பத்தை அனுபவித்த தாவீதின் அபயக்குரலாக உள்ளது. “என் பிராணன் சஞ்சலத்தினால் கழிந்துபோயிற்று” (வச 10) என்று அவன் எழுதுகிறான். அவனது சிநேகிதர்களும் அயலகத்தாரும் அவனைக் கைவிட்டது (வச. 11) அவனது துன்பத்தை அதிகம் கூட்டியது.

ஆனால் தாவீதிற்கு உண்மையான ஒரே தேவன்மேல் அசையாத விசுவாசம் இருந்தது. “நானோ, கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன், நீரே என் தேவன் என்று சொன்னேன். என்னுடைய காலங்கள் உம்முடைய கரத்திலிருக்கிறது”
(வச. 14-15) என்று கூறினான் அவனுடைய துக்ககரமான புலம்பல் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள்” (வச. 24) என்ற நம்பிக்கையுடன் கூடிய ஊக்கமான வார்த்தைகளில் முடிவடைகிறது.

இந்த முறை காத்திருப்பு அறையிலிருந்த எங்களுக்கு அறுவை சிகிச்சை நிபுணர் நல்ல செய்தியைக் கொடுத்தார். அது அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட என் மனைவி பூரண குணமடைந்து விடுவார் என்பதுதான். கவலையினின்று விடுபட்டு மன நிம்மதி அடைந்தோம். எனது மனைவி ஒருவேளை சுகமடைய இயலாவிட்டாலும் நமது காலங்கள் வல்லமையுள்ள தேவனின் கரங்களிலுள்ளது என்பதை அறிந்திருக்கிறேன்.