உலகளவில் தொற்று பரவும் சூழ்நிலையில் மனநலம் பெரிதாக பாதிக்கப்படுகின்றது. மனநலம் என்பது வங்கி கணக்கு போல நாம் நினைத்தோமானால், நம் உணர்வுகள் பணமாக இருந்தால், அதில் பணம் வைப்பும் திரும்பப் பெறுதலும் உண்டு. உலக அளவில் நோய் தொற்று, ஊரடங்கு, பொருளாதார அழிவு, நிச்சயமற்ற எதிர்காலம் மற்றும் அநேக பிரச்சினை மற்றும் நோய்த் தொற்றை சூழ்ந்து பல பிரச்சினைகளினாலும் நம் உணர்வுகளின் வங்கிகளில் இருந்து அநேக நேரம் பணம் திரும்ப பெறுதலின் நேரமாகிறது. மற்றும் நம்மில் சிலர் வறுமையில் இருக்கிறோம் ஏனென்றால் எப்பொழுதும் நம்மால் பணத்தை சேமிக்க முடியவில்லை.

இதேபோன்ற சூழ்நிலையை எலியாவும் சந்தித்தார் மற்றும் அவரின் உணர்ச்சிகள் மற்றும் ஆவிக்குரிய வங்கியும் பாகால் தீர்க்கதரிசிகளை எதிர்க்கும் போது காலியாகிவிட்டது. எனவே, யேசபேல் அவரை கொலை செய்வதாக மிரட்டிய போது, அவர் என்ன செய்வதென்று அறியாமல் திகில் அடைந்து ஓடினார். தீர்க்கதரிசி அயல்நாட்டில் ஒரு விதவையிடம் உதவியை கண்டறிந்தார். மற்றும் அங்கு வசிப்பிடம், பாதுகாப்பு மற்றும் அவருடைய மனநலம் மீண்டும் வளர்க்க கால அவகாசம் அவருக்கு கிடைத்தது.

மனச் சோர்வைக் கையாள்வதற்கு, விளக்கத்திற்கு அப்பால் ஓர் ஒப்புமையை உருவாக்க சில உண்மைகளை நாம் உபயோகிக்கலாம். சில ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை எலியாவின் அனுபவம் மூலம் பெறுகிறோம். அவர் வேறு நாட்டிற்கு சென்றார். இப்பொழுது- நம்மால் பயணம் செய்ய முடியாது ஆனால் முடிந்தால், ஒரு வித்தியாசமான சூழல் ஆத்துமாவிற்கு அருமருந்தாகும். நமக்கான இடம் நமக்கு கிட்டும்.

பஞ்ச காலத்திலும் தமக்கு உணவளிப்பவரை கண்டறிந்தார். உணவுக்கு குறைவில்லை. உணவே மருந்து, அது நம் மனங்களையும் சரீரங்களையும் தாமே புதுப்பித்து எதிர்ப்பு சக்தியை வளர்க்கின்றது. அவருக்கு ஓய்வெடுக்க இடம் இருந்தது, நாம் குணமாக நல்ல தூக்கம் இன்றியமையாதது.

நம்முடைய உணர்வுகளின் வங்கிகளில் அநேக முறை பணம் திரும்பப் பெறுதலாலும் வைப்புப் பணம் குறைவாக இருப்பதனாலும் நாம் மனச்சோர்வுக்கு உள்ளாகிறோம். அது நாம் ‘பாதுகாப்பான இடத்திற்கு தப்பிக்கும்’ நேரம். உங்கள் உணர்வுகளின் வங்கி நிறைவாக இருந்தும் உங்கள் உலகம் அழியாமல் இருந்தால் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள், வசிப்பிடம், தோழமை, சரீரம் மற்றும் உணர்வுகளின் தேவைகளையும் சந்திக்கும் ஆதாரமாக இருங்கள்.

வேத வழியாக உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து மீண்டு வர உதவக்கூடிய சில கட்டுரைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

banner image

மனச் சோர்வு என்னும் மனநோயில் நான் தினமும் வாழ்கின்றேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆசிரியராக வேலை செய்து சோர்வுற்ற போது எனக்கு மனச் சோர்வு இருந்ததாக கண்டறியப்பட்டது.

banner image

எனக்கு மனச்சோர்வு வரும் என்று நான் நினைத்ததே இல்லை. அது அந்நியர்களுக்கு தான் வரும் என்று நினைத்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய நெருங்கிய தோழி மனச்சோர்வுடன் போராடிய போதும், அவள் துன்பத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அது ஒரு சிறிய காலமே என்றும் மக்கள் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே மீண்டு விடுவர் என்று நினைத்தேன்.

banner image

நாம் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில், இருட்டில் பயப்படுவது போன்ற சிறியது முதல் முழுதாக பாதிக்கும் வரை கவலையை அனுபவிக்கிறோம். கவலை தாக்கும்போது தேவனைப் பற்றி நாம் அறிந்தவற்றை நினைவு கூருவது கடினமாக இருக்கிறது. சற்று நிதானித்து நிலைமையை முழுவதுமாக பார்ப்பது கடினமாக இருக்கிறது.

banner image

வெளிநாட்டிற்கு பாடசாலைக்கோ அல்லது வேலைக்காகவோ செல்வது ,ஒரு பிரிவிலிருந்து மீட்டெழுதல், குடும்பத்தில் தீராத மன வேறுபாடுகள் அல்லது காரணம் இல்லாமலே- நாம் அனைவரும் தனிமையின் பிடியை உணர்ந்திருக்கிறோம்.

banner image

நான் எப்பொழுதும் பாதுகாப்பின்மையோடு போராடுகிறேன். தவறுகளை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நான் வளர்ந்த சூழல் எனக்கு கற்றுத்தந்தது. அது ஏற்பட்டால் அது என்னுடைய தவறாகும் அதனால் நான் எப்போதும் சரியான வனாக இருக்க வேண்டிய தேவையும் அனைவரிடமும் என்னுடைய சிறந்த பதிப்பை வழங்க வேண்டியுள்ளது.

banner image